PPF: எல்ஐசியின் ரசிகர்களும் பிபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம்.. ரூ.1 கோடி வருமானம் எப்படி பார்ப்பது?

இன்றைய காலகட்டத்தில் சம்பளதாரர்கள் மட்டும் அல்ல, பெண்கள், சுய தொழில் செய்பவர்கள், சிறுதொழில் என பலதரப்பினரும் ஆர்வத்துடன் முதலீடு செய்யும் திட்டம் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி.

இது சம்பளதாரர் மட்டும் அல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதொரு திட்டம். இந்த திட்டத்தில் சந்தை அபாயம் என்பது இல்லாததால், பல தரப்பினரும் விரும்பும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகின்றது.

இந்த திட்டத்தில் வரி சலுகையும் கிடைப்பதால் இன்னும் சம்பளதாரர்கள் மத்தியில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பார்க்கப்படுகிறது.

எல் ஐசி Vs PPF

எல் ஐசி Vs PPF

எல்ஐசி-யின் ஜீவன் ஆனந்த் திட்டத்தினை போல முதலீடு செய்தால் முதிர்வு பலன் தவிர, போனஸும் உண்டு. அதேபோல் பிபிஎஃப் திட்டத்தில் வட்டி விகிதம் உண்டு. அதுவும் கூட்டு வட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக எல்ஐசி ரசிகர்களும் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களது பணமும் பாதுகாப்பாக இருக்கும். உங்களது கார்ப்பஸ் இலக்கும் அதிகரிக்கும்.

எல்ஐசி போல நீண்டகால முதலீடு

எல்ஐசி போல நீண்டகால முதலீடு

எல்ஐசி பாலிசியில் உடனடியாக லாபம் பார்க்காமல் எதிர்கால நலன் கருதி எப்படி முதலீடு செய்கிறோமோ? அதனைபோல நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பிபிஎஃப்-ம் ஒரு நல்ல திட்டமாகும். இதில் முதிர்வுகாலத்தினை தாண்டியும் நீட்டித்துக் கொள்ளலாம்.

வசதிக்கு ஏற்ப முதலீடு

வசதிக்கு ஏற்ப முதலீடு

முதலீட்டாளர்கள் தங்களின் வசதிகேற்ப மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ முதலீடு செய்து கொள்ளலாம். குறிப்பாக வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் அதிகபட்சமாக முதலீடு செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பான வருமானம்

பாதுகாப்பான வருமானம்

இது முதலீட்டாளர்களுக்கு கணிசமான நிரந்தர வருமானம் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. இதில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். மொத்தத்தில் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பினையும், நிரந்தர வருமானமாகவும் உள்ளது. இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம்.

வரிச்சலுகை உண்டா?

வரிச்சலுகை உண்டா?

இந்த முதலீட்டு திட்டத்தில் EEE வரிச் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி சலுகை கிடைக்கிறது. இது தவிர இந்த முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு. இதன் பயன்படுத்தி தங்களது கார்ப்பஸினை இன்னும் கணிசமாக உயர்த்த முடியுமா? என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாதம் ரூ.12,500

மாதம் ரூ.12,500


இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடான 1.5 லட்சம் ரூபாயினை நீங்கள் உங்களது 18 வயதில் மாதம் 12,500 ரூபாய் செலுத்தி வருகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். இதில் 15 ஆண்டுகள் முதிர்வுக்கு பிறகு, அதாவது உங்களின் 33 வயதில் 40,20,031 ரூபாய் கார்பஸ் ஆக பெறுவீர்கள். இதில் உங்களின் முதலீட்டு தொகை 22,50,000 ரூபாயாகும். இதே வருமானம் 17,70,301 ரூபாயாகும்.

ரூ.1 கோடி சாத்தியமா?

ரூ.1 கோடி சாத்தியமா?

இதே நீங்கள் 30 ஆண்டுகள் உங்களின் முதலீட்டினை தொடருவதாக வைத்துக் கொள்வோம், உங்களுக்கு 48 வயது எனும்போது உங்களது முதலீடு 45,00,000 ரூபாயாக இருக்கும். உங்களது வட்டி 1,09,50,911 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தம் உங்களது கார்ப்பஸ் 1,54,50,911 ரூபாயாக இருக்கும். எனினும் இதனை இடையில் நிறுத்தாமல் முதலீடு செய்வது அவசியம். அதோடு திட்டத்தினை கண்டிப்பாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டும்.

எப்படி தொடங்குவது?

எப்படி தொடங்குவது?

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். தற்போது வங்கிகளில் ஆன்லைனிலேயே கூட தொடங்கிக் கொள்ளும் வசதிகள் வந்து விட்டது. ஆக வீட்டில் இருந்தே கூட நீங்கள் ஆன்லைனிலேயே தொடங்கிக் கொள்ளலாம். அதேபோல நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

இடையில் பணம் எடுக்கலாமா?

இடையில் பணம் எடுக்கலாமா?

பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் நீங்கள் மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்கினை அடைய இதில் இடையில் பணம் எடுக்காமல் இருக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+