ரூ2 கோடி வரைக்கும் 6.66% தான் வட்டி .. எல்ஐசி கொடுக்கும் சூப்பர் சான்ஸ்..எவ்வளவு காலம்..!

விழாக்கால பருவம் நெருங்கிக் கொண்டுள்ள இந்த நிலையில், பற்பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.

அந்த வகையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் என்ன சலுகையை கொடுத்துள்ளது என்பது பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதமே வட்டி விகிதத்தினை 6.66% ஆக குறைத்தது. இது 50 லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கும் வாடிக்கையாளார்களுக்கு இது பொருந்தும் என கடந்த ஜூலை மாதமே அறிவித்தது.

எவ்வளவு வட்டி விகிதம்?

எவ்வளவு வட்டி விகிதம்?

எனினும் தற்போது இந்த சலுகையானது 2 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு 6.66% வட்டி விகிதம் பொருந்தும் என அறிவித்துள்ளது. எனினும் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையானது சிபில் ஸ்கோர் 700 அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும். இது சம்பளதாரர் அல்லது தொழில் முனைவோர் என அனைவருக்கும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

செயல்பாட்டு கட்டணத்தில் சலுகை

செயல்பாட்டு கட்டணத்தில் சலுகை

இது செப்டமர் 22 முதல் நவம்பர் 30 வரையில் அனுமதிக்கப்பட்ட கடன்களுக்கு மட்டுமே இந்த சலுகையினை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனம் செயல்பாட்டு கட்டணத்தில் 10,000 ரூபாய் அல்லது 0.25% கட்டணத்தில் எது குறைவோ அதனை எடுத்துக் கொள்ளும் என்ற சலுகையும் கொடுத்துள்ளது. இது 2 கோடி ரூபாய் வரையிலான கடன் எனும்போது குறைவாகவே இருக்கும்.

6 மாத தவணை விலக்கு

6 மாத தவணை விலக்கு

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸின் இந்த சலுகையானது, தனது ஓய்வுகால சலுகையான, கிரிஹா வரிஷ்டா திட்டத்தின் கீழ் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.. இந்த திட்டத்தின் கீழ் கடன் எடுத்தவர்கள் 6 மாத தவணை செலுத்த தேவையில்லை என்பது தான் இந்த திட்டத்தில ஹைலைட்டே. .

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

இந்த திட்டத்தின் மூலம், கடன் வாங்கியவரின் வயது 65 வரை இருக்க வேண்டும். இதன் கீழ் கடனின் காலம் வாடிக்கையாளரின் வயது 80 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தயாராக உள்ள வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 EMI விலக்கு மற்றும் கட்டுமானத்தின் கீழ் உள்ள வீடுகளுக்கான தவணை கட்டணத்தில் 48 மாத கால தடை போன்ற வசதிகளும் கிடைக்கும்.

ஹெச்டிஎஃப்சி-யின் சலுகை

ஹெச்டிஎஃப்சி-யின் சலுகை

இந்த வாரத் தொடக்கத்தில் தனியார் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி, விழாக்கால சலுகையாக புதியதாக வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் 6.70%ல் இருந்து ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+