எல்ஐசி ஜீவன் அமர் பாலிசி என்பது ஒரு டெர்ம் பாலிசியாகும். இந்த பாலிசியில் பாலிசி காலம் முழுவதும் ஒரே ஒரு காப்பீட்டு தொகையை தேர்வு செய்யலாம். அல்லது அதிகரிக்கவும் செய்யலாம்.
இந்த பாலிசியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் இறப்பு பலனும் உண்டு.
இந்த பாலிசியில் பாலிசிதாரர் இறக்கும்பட்சத்தில் நாமினி, பணத்தை மொத்தமாகவோ அல்லது 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டு தவணைகளாகவோ பிரித்து வாங்கிக் கொள்ளலாம். இதுவும் மிக பயனுள்ள ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
பிரீமியம் எவ்வளவு?
இந்த பாலிசியில் பாலிசி காலம் முழுமைக்கும் பிரீமியத்தை செலுத்தலாம். இந்த பாலிசியில் பாலிசிகாலம் முழுவதும் அல்லது விரைவாகவும் பிரீமியத்தினை செலுத்தி முடிக்கலாம். முழுவதுமாக ஒரே தவணையிலும் பிரீமியத்தினை செலுத்திக் கொள்ளலாம்.
வயது வரம்பு?
இந்த பாலிசியினை 18 - 65 வயது வரையிலானவர்கள் எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரின் 80 வயது வரையில் காப்பீடு பெறலாம். இந்த பாலிசியினை 20 வயதான ஒருவர் எடுத்தால், அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டு காலமாக இருக்கும்.
ரைடர் பாலிசி
இதில் ரைடர் பாலிசிகளும் உண்டு. குறிப்பாக விபத்து குறித்து, புகை பிடிப்போருக்கும் பாலிசி உண்டு. இந்த பாலிசியில் மற்ற பாலிசிகளை போலவே பெண்களுக்கான பிரீமியம் குறைவு. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாயாகும். அதிகபட்ச காப்பீடு என்பது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.
வரி சலுகை
இந்த பாலிசியில் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இந்த பாலிசியினை பொறுத்த வரையில் பாலிசி தாரர் எப்போது தங்களால் பிரீமியம் செலுத்த முடியுமோ? அப்போது செலுத்திக் கொள்ளலாம். பிரீமியம் உங்களுக்கு உகந்தவாறு குறைந்தபட்சம் செலுத்திக் கொள்ளலாம். எளிதில் க்ளைம் செய்வதும் செய்து கொள்ளலாம்.. எல்ஐசி ஜீவன் அமர் பாலிசி காலம் 10 முதல் 30 ஆண்டுகளாகும்.
எப்படி எடுக்கலாம்
இந்த பாலிசியினை இணையதளம் மூலமாகவோ அல்லது ஆப் லைன் மூலமாகவும் விண்ணபிக்கலாம். இந்த பாலிசியினை எடுக்க பாலிசிதாரர் தனிப்பட்ட விவரங்கள், மருத்துவ விவரங்கள் மற்றும் நாமினி பற்றிய விவரங்கள் என அனைத்தையும் வழங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications