லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) காப்பீடு வழங்கும் துறையில் மிகவும் நம்பகமான பெயர்களில் ஒன்றாக உள்ளது. நல்ல வருவாயை வழங்கி பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களை LIC வழங்குகிறது. இதன் காரணமாக மக்கள் பலரும் எல்ஐசியை நாடுகின்றனர். எல்ஐசி குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைத்து வயதினருக்கும் பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலர் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். குறைந்த பிரீமியத்துடன் நல்ல வருமானத்தைப் பெறக்கூடிய சில திட்டங்களையும் LIC வழங்குகிறது.
எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி (LIC Jeevan Anand Policy): LIC வழங்கும் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் "எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி". இந்தத் திட்டத்தில் தினமும் ரூ 45 முதலீடு செய்வதன் மூலம் ரூ 25 லட்சம் நிதியை உருவாக்கலாம்.

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி என்றால் என்ன?: எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி குறைந்த பிரீமியத்துடன் அதிக வருமானம் பெற விரும்புவோருக்கு ஏற்ற முதலீட்டு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சமாகும், அதிகபட்ச வரம்பு இந்தத் திட்டத்திற்கு இல்லை.
எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி கணக்கீடு: இந்தத் திட்டத்தில் ரூ.25 லட்ச ரூபாய் கார்பஸை உருவாக்க ஒரு நாளைக்கு 45 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். அப்படியானால் மாதத்திற்கு 1,358 ரூபாய் முதலீடு செய்யலாம். இது ஒரு நீண்ட கால திட்டம் ஆகும். இதற்கு 15 முதல் 35 ஆண்டுகள் வரை முதலீடு காலம் தேவைப்படும். அப்பொழுதுதான் 25 லட்ச ரூபாயை பெற முடியும். நீங்கள் 35 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் ஆண்டுக்கு 16,300 சேமித்திருப்பீர்கள்.
போனஸ் நன்மைகள்: 35 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.16,300 முதலீடு செய்தால், மொத்தம் ரூ.5,70,500 டெபாசிட் செய்திருப்பீர்கள். ரூ 5 லட்ச அடிப்படைத் தொகையுடன் கூடுதலாக, 8.60 லட்சம் ரிவர்ஷனரி போனஸ் மற்றும் 11.50 லட்சம் இறுதி போனஸ் வழங்கப்படும். இந்த போனஸ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், போனஸைப் பெற உங்கள் பாலிசி குறைந்தது 15 ஆண்டுகள் செயலில் இருக்க வேண்டும்.
பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், நாமினி காப்பீட்டுத் தொகையில் 125 சதவீதத்திற்கும் இணையான பலனைப் பெறலாம். கணிசமான வருமானம் மற்றும் கூடுதல் நன்மைகளுடன் நீண்ட கால முதலீட்டைத் தேடுபவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது.


Click it and Unblock the Notifications