எல்ஐசியின் ஜீவன் லாப்.. குழந்தைகளின் கல்வி திருமணத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்..!

எல்ஐசி ஜீவன் லாப் பாலிசி இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் வழங்கப்படும், பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரண்டையும் வழங்கும் ஒரு திட்டமாகும்.

இந்த திட்டத்தில் மூன்று பிளான்கள் உள்ளன, ஒன்று 16 வருட பாலிசியாகும்.. இந்த பாலிசியில் நீங்கள் 10 வருடம் பணம் கட்டினால் போதும். இதே இரண்டாவது திட்டம் 21 பாலிசி காலமாகும்.. இந்த பாலிசியில் 15 வருடம் நீங்கள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

மூன்றாவது 25 வருட பாலிசி காலம் கொண்ட திட்டத்தில், 16 வருடம் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

பாலிசியின் சிறப்பம்சங்கள்

பாலிசியின் சிறப்பம்சங்கள்

இந்த பாலிசியில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது. பாலிசி காலம் முதிர்வு வரை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கான சிறந்த பாலிசியாகவும் பார்க்கப்படுகிறது. இதனுடன் ரைடர்ஸ் பாலிசிகளையும் பெற்றுக் கொள்ளும் அம்சம் உண்டு.

வரி விலக்கு உண்டு

வரி விலக்கு உண்டு

இது தவிர இந்த பாலிசியில் 80சி கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகைக்கு 10 (10டி)யின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பாலிசியினை குறைந்தபட்ச வயது 8 வயது. அதிகபட்ச வயது வரம்பு 16 அண்டு பாலிசிக்கு 59 வயது. இதே 21 ஆண்டு பாலிசிக்கு 54 வயதாகும். இதே 25 ஆண்டு பாலிசி எனில் அதிகபட்ச வயது 50 ஆகும்.

காப்பீடு எவ்வளவு?

காப்பீடு எவ்வளவு?

இந்த பாலிசியினை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 2 லட்சம் காப்பீடாகும். அதிகபட்ச வரம்பு என எதுவும் இல்லை. இந்த பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. இதே 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் இந்த பாலிசி பிரீமியம் அடிப்படையில் தள்ளுபடியும் உண்டு.

இறப்பு பலன் எவ்வளவு?

இறப்பு பலன் எவ்வளவு?

பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது இறந்து விட்டால், வாரிசுதாரருக்கு, அடிப்படை காப்பீடு தொகை மற்றும் திரட்டப்பட்ட எளிய போனஸ் தொகை மற்றும் இறுதி கூட்டல் போனஸ் (FAB) என அனைத்தும் சேர்ந்து பெறுவார்கள். ஆக பாலிசி எடுக்கும்போது நாமினி விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+