முதிர்வு காலத்தில் ரூ.54 லட்சம்.. தினசரி ரூ.238 போதும்.. அசத்தலான எல்ஐசி-ன் ஜீவன் லாப்!

இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதல் நினைவுக்கு வருவது எல் ஐ சி தான். அது பாலிசி எடுத்திருந்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி. அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்துள்ளது.

அந்த வகையில் எல் ஐ சி வழங்கும் ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

எல் ஐ சி ஜீவன் லாப் பாலிசியானது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு என இரண்டையும் சேர்த்து வழங்கும் பாலிசியாகும்.

மூன்று பிளான்கள்

மூன்று பிளான்கள்

எல் ஐ சி ஜீவன் லாப் திட்டத்தில் மூன்று பிளான்கள் உள்ளன, ஒன்று 16 வருட பாலிசியாகும். இந்த பாலிசியில் நீங்கள் 10 வருடம் பணம் கட்டினால் போதும். இதே இரண்டாவது திட்டம் 21 பாலிசி காலமாகும்.. இந்த பாலிசியில் 15 வருடம் நீங்கள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. மூன்றாவது 25 வருட பாலிசி காலம் கொண்ட திட்டத்தில், 16 வருடம் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

சிறப்பம்சங்கள் என்ன?

சிறப்பம்சங்கள் என்ன?

ஜீவன் லாப் பாலிசியில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது.

பாலிசி காலம் முதிர்வு வரை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கான சிறந்த பாலிசியாகவும் பார்க்கப்படுகிறது.

இதனுடன் ரைடர்ஸ் பாலிசிகளையும் பெற்றுக் கொள்ளும் அம்சம் உண்டு.

காப்பீடு எவ்வளவு?

காப்பீடு எவ்வளவு?

ஜீவன் லாப் பாலிசியினை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 2 லட்சம் காப்பீடாகும். அதிகபட்ச வரம்பு என எதுவும் இல்லை. இந்த பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. பாலிசி பிரீமியம் அடிப்படையில் தள்ளுபடியும் உண்டு.

இறப்பு பலன் உண்டா?

இறப்பு பலன் உண்டா?

பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது இறந்து விட்டால், வாரிசுதாரருக்கு, அடிப்படை காப்பீடு தொகை மற்றும் திரட்டப்பட்ட எளிய போனஸ் தொகை மற்றும் இறுதி கூட்டல் போனஸ் (FAB) என அனைத்தும் சேர்ந்து பெறுவார்கள். ஆக பாலிசி எடுக்கும்போது நாமினி விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு

16 ஆண்டுகால பாலிசியினை எடுக்க குறைந்தபட்சம் 8 வயது இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 59 வருடங்களாகும்.

21 வருட பாலி எடுக்க 54 ஆண்டுகளாகும். இதே 25 வருட பாலிசியினை எடுக்க 50 வயதாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அதிகபட்ச முதிர்வு வயது 75 ஆண்டுகள் ஆகும்.

ரூ.54 லட்சம் எப்படி சாத்தியம்?

ரூ.54 லட்சம் எப்படி சாத்தியம்?

25 வயதாகும் ஒருவர் 25 வருட கால பிரீமிய திட்டத்தினை தேர்தெடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். 20 லட்சம் ரூபாயினை அடிப்படை தொகையாகக் கொண்டு, வருடாந்திர பிரீமியம் 86,954 (ஜிஎஸ்டி தவிர்த்து) ரூபாய் அல்லது ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட 238 ரூபாய் செலுத்த வேண்டும். நீங்கள் 25 வயதை எட்டும்போது அல்லது 25 ஆண்டுகளுக்கு பிறகு திட்டம் முதிர்ச்சியடையும்போது, ரைடர் பலனையும் கழித்து, சாதாரண காப்பீட்டு பலனின் கீழ், ஒட்டுமொத்த முதிர்வு தொகை சுமார் 54.50 லட்சம் ரூபாயாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+