எல்ஐசி ஜீவன் லக்சயா.. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எடுக்க வேண்டிய அசத்தல் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசி ஜீவன் லக்சயா உங்கள் குழந்தைகளுக்களுக்கான ஒரு பிரத்யேக திட்டம். இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தினை நிதி ரீதியாக பாதுகாப்பாக மாற்றிட முடியும்.

 

இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்பது பலரும் திட்டமிட்டமிட்டாலும், குழந்தைகளுக்கு என தனியாக முதலீடு செய்பவர்கள் மிக குறைவே.

ஆனால் அவர்களின் எதிர்கால கல்வி, திருமணம் இப்படி பலவற்றிற்காகவும் தனியாக முதலீடு செய்வது என்பது ஒரு முக்கியமாக நாம் செய்ய வேண்டி விஷயமாகும். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான முதலீட்டு திட்டங்கள் பல உள்ளன. அந்தவகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எல்ஐசி ஜீவன் லக்சயா தான்.

ஹெச்டிஎப்சி: புதிய குளோபல் மியூச்சவல் பண்ட் திட்டம்..! 23 நாடுகளில் முதலீடு..! ஹெச்டிஎப்சி: புதிய குளோபல் மியூச்சவல் பண்ட் திட்டம்..! 23 நாடுகளில் முதலீடு..!

எல்ஐசி ஜீவன் லக்சயா திட்டம்

எல்ஐசி ஜீவன் லக்சயா திட்டம்

எல்ஐசி ஜீவன் லக்சயா இன்சூரன்ஸ் திட்டம் லாபம் நிறைந்த ஒரு குறைந்த பிரீமியம் செலுத்தும் காலம் கொண்ட ஒரு மிக நல்ல திட்டமாகும்.

இதனை 18 வயது முதல் 50 வயது வரையில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் இணையலாம்.

குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாய். அதிகபட்சம் என்ற வரம்பு கிடையாது. இந்த பாலிசியினை குழந்தைகளுக்காக பெற்றோர், குழந்தைகளை நாமினியாக வைத்து எடுக்க வேண்டும்.

பிரீமியம் எத்தனை ஆண்டுகள்?

பிரீமியம் எத்தனை ஆண்டுகள்?

இந்த பாலிசியின் காலம் 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரையில் உள்ள ஒரு திட்டமாகும்.
இந்த பாலிசி பிரீமியம் செலுத்தும் காலம் உங்கள் பாலிசி காலத்தில் 3 வருடங்களை கழித்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் 15 ஆண்டுகள் பாலிசி எடுக்கின்றீர்கள் எனில், 12 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. 25 வருட பாலிசி எனில், 22 வருடம் பிரீமியம் செலுத்தினால் போதும்.

எப்படி செலுத்தலாம்
 

எப்படி செலுத்தலாம்

இதில் பிரீமியத்தினை உங்களுக்கு ஏற்றவாறு ஆண்டு அரையாண்டு, காலாண்டு, மாதாந்திரம் என எப்படி வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம்.
இதில் விபத்து மற்றும் திறனிழப்பு பயங்களை ரைடர் பாலிசிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணம் இதோ

உதாரணம் இதோ

உங்களுக்கு 30 வயது என எடுத்துக் கொள்வோம். பாலிசி காலம் 25 ஆண்டுகள். நீங்கள் 22 ஆண்டுகள் பிரீமியம் செலுத்துவீர்கள்.
Sum assured - Rs.10,00,000
வருட பிரீமியம் - ரூ.44826+ ஜிஎஸ்டி (4.5%)
அரையாண்டு பிரீமியம் - ரூ.22,652+ ஜிஎஸ்டி
காலாண்டு பிரீமியம் - ரூ.11,445+ ஜிஎஸ்டி
மாத பிரீமியம் - ரூ.3,815 + ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி விகிதம் முதல் ஆண்டு பிரீமியத்தில் - 4.5%
இரண்டாவது ஆண்டில் இருந்து - 2.25% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும்.

என்னென்ன பலன்

என்னென்ன பலன்

பாலிசிதாரர் பாலிசி காலத்தில் இறந்துவிட்டால், மீதமிருக்கும் காலத்திற்கு பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக நாமினிக்கு Sum assured தொகையில் 10% பாலிசி முடிவடையும் வரையில், வருடா வருடம் கிடைக்கும்.
உதாரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் Sum assured எனில், 1 லட்சம் ரூபாய் வருடா வருடம் கிடைக்கும்.
அதோடு முதிர்வு காலத்தில் 110% Sum assured கிடைக்கும்.
முதிர்பலன்: Sum assured + Bonus + FAB

இறப்பு பலன் என்ன?

இறப்பு பலன் என்ன?

இதே துரதிஷ்டவசமாக பெற்றோர் (பாலிசிதாரர்) இறந்துவிட்டாலும், குழந்தைக்கு நிதி ரீதியாக இது ஒரு பாதுகாப்பாக அமையும்.
அதே போல இறப்பு பலன் மற்றும் முதிர்வு பலனை 5 வருடம் அல்லது 10 வருடம், 15 வருடம் என பலனை, தவணை தொகையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆக இது மற்ற பாலிசிகளை காட்டிலும் மிக பாதுகாப்பான ஒரு திட்டமாகவும், தனித்துவமான திட்டமாகவும் உள்ளது.

கூடுதல் பலன்கள்

கூடுதல் பலன்கள்

நீங்கள் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரைக்கும் ரைடர் பாலிசியினையும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் பாலிசிதாரர் இயற்கையாகவே மரணமடைந்தாலும் 10 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கும். இதே விபத்து மூலமாக இறந்தாலும் இந்த பலன் கிடைக்கும்.
இது தவிர தீவிர நோய்களுக்கான ரைடர் பாலிசிகள் உள்ளன. ஆக பாலிசிதாரர் தேவைப்பட்டால் அதனையும் எடுத்துக் கொள்ளலாம்.

லோன் எடுக்கலாமா?

லோன் எடுக்கலாமா?

இந்த பாலிசிக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிணையமாக வைத்து கடன் பெற முடியும்.
அதே போல இரண்டு ஆண்டுகள் கழித்தும் சரண்டரும் செய்து கொள்ளலாம். இறப்பு பலன் அல்லது முதிர்வு பலனுக்கு 10(10டி)ன் படி வரி சலுகை கிடைக்கும். என். ஆர்.ஐக்களும் இந்த பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC jeevan lakshya child plan details, benefits & Eligibility criteria

Insurance latest updates.. LIC jeevan lakshya child plan details, benefits & Eligibility criteria
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X