ஒரு நாளைக்கு ரூ.200 போதும்.. ரூ.28 லட்சம் கேரண்டி.. எல்ஐசி அட்டகாசமான திட்டம்!

மாத மாதம் 6000 ரூபாய் சேமித்தால் 28 லட்சம் ரூபாய்க்கு சொந்தகாரர் ஆக முடியுமா? எல்ஐசி-யில் அப்படி என்ன திட்டம் உள்ளது. இதில் எப்படி முதலீடு செய்யலாம்? இது யாருக்கு ஏற்றது? வாருங்கள் பார்க்கலாம்.

எல்ஐசி பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற பல்வேறு வகையான திட்டங்களை கொண்டுள்ளது. இன்று நாம் பார்க்கவிருக்கும் திட்டம் எல்ஐசி-ன் ஜீவன் பிரகதி பாலிசி திட்டமாகும்.

வயது வரம்பு

வயது வரம்பு

இந்த திட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும் இணைந்து கொள்ளலாம். 45 வயதுக்கு மேல் இணைய முடியாது. இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். இதன் மூலம் முதிர்வு காலத்தில் கணிசமான தொகையினை பெற முடியும்.

இறப்பு பலன் உண்டு

இறப்பு பலன் உண்டு

இந்த பாலிசியில் இறப்பு பலனும் உண்டு. இதில் ரைடர் பாலிசி வசதிகளும் உண்டு. இதில் விபத்து காப்பீடும் கிடைக்கும், செயல் திறன் இழப்புக்கும் ரைடர் பாலிசி வசதியும் உண்டு. இந்த பாலிசிக்கு எதிராக கடன் வசதியும் உண்டு. எனினும் மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தி இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலிசியினை சரண்டர் செய்வதானாலும் செய்து கொள்ளலாம்.

தினசரி ரூ.200 முதலீடு

தினசரி ரூ.200 முதலீடு

தினசரி 200 ரூபாய் வீதம் மாதம் 6000 ரூபாய் செலுத்தினால், 20 வருடம் கழித்து 28 லட்சம் ரூபாய் முதிர்வு பலனாக பெறலாம். இதில் விபத்து காப்பீடாக குறைந்தபட்சம் 10,000 ரூபாயும், அதிகபட்சம் 1 கோடி ரூபாயும் கிடைக்கும்.

இந்த பாலிசியில் 12 - 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

முக்கிய பலன்கள்

முக்கிய பலன்கள்

எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டம் உங்களுக்கு பல வழிகளில் உதவுகிறது. இதில் நீங்கள் விபத்து காப்பீடு மற்றும் இறப்பு காப்பீடு என இரண்டும் உங்களுக்கு உண்டு. ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இது அதிகரிக்கும்.

இந்த திட்டத்தில் 0 - 5 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் - 100%

5 - 10 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் -125%

11 - 15 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் -150%

16 - 20 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் -200%

பிரீமியத்தில் சலுகை

பிரீமியத்தில் சலுகை

இந்த பிரகதி பாலிசியில் பிரீமியம் செலுத்தும்போது ஆண்டு தொகையாக செலுத்தினால், 2% தள்ளுபடியும், அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் 1% பிரீமியமும் தள்ளுபடியும் கிடைக்கும்.

இன்சூரன்ஸ் மீதான ஆர்வம்

இன்சூரன்ஸ் மீதான ஆர்வம்

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இன்சூரன்ஸ் மீதான ஆர்வம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இன்சூரன்ஸ் மட்டும் அல்ல, முதலீட்டின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது. முதலீடோ இன்சூரன்ஸோ முதிர்வு காலத்தில் ஒரு கணிசமான தொகை வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த ஜீவன் பிரகதி பாலிசி ஏற்றதொரு பாலிசியாகும்.

இன்சூரன்ஸ் + முதலீடு

இன்சூரன்ஸ் + முதலீடு

இன்சூரன்ஸுக்கு இன்சூரன்ஸ் ஆகவும், முதலீட்டினை போல முதிர்வு காலத்தில் நல்லதொரு பலனையும் கொடுக்கும் எனலாம். இது வயதான காலத்தில் அவர்களுக்கு ஒரு கையிருப்பதை போலவும் இருக்கும். இதன் மூலம் அவர்கள் நிதி ரீதியாக யாரையும் எதிர்பாராமல் சுதந்திரமாக இருக்க வழிவகுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+