insurance: இன்சூரன்ஸ் என்றாலே எல்ஐசி என்பது தான் இன்சூரன்ஸ் எடுத்தவர்களும் சரி, எடுக்காதவர்களும் நினைப்பது எல்ஐசி தான். அப்படிப்பட்ட எல்ஐசி பற்பல திட்டங்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கி வருகின்றது.
இன்சூரன்ஸ் திட்டங்களை பொறுத்த வரையில் பல திட்டங்கள் இருந்தாலும், பொதுவாக நம்மவர்கள் இடையே பெரும் ஈர்ப்பினை பெற்றுள்ளது, ஓய்வூகால திட்டங்கள் தான்.
இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்தில் ஆவது நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைப்போம். அப்படி நினைப்பவர்களுக்கு எல்ஐசி-யின் ஜீவன் சாரல் திட்டம் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.
எல்ஐசி-யின் ஜீவன் சாரல் திட்டம்
எல்ஐசி-யின் ஜீவன் சாரல் திட்டம் என்பது ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும். இதில் பாலிசிதாரர் பிரீமியம் செலுத்தும் முறை மற்றும் எவ்வளவு செலுத்தலாம் என என்பதை தீர்மானிக்கலாம். இந்த திட்டம் நிரந்தர வருமானம் தரும் ஒரு நிலையான வருமானம் தரும் திட்டமாகும்.
யாரெல்லாம் இணையலாம்?
ஜீவன் சாரல் திட்டத்தில் 40 - 80 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் திட்டமிட்டு ஒரே ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதுமானது. அதற்கேற்ப மாத மாத வருமானம் கிடைக்கும். இதன் மூலம் ஓய்வுகாலத்திற்கு திட்டமிடுபவர்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
எப்படி பெறலாம்
இந்த ஜீவன் சாரல் திட்டத்தில் கிடைக்கும் பலனை பாலிசிதாரர் மாத மாதமாகவும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது அரையாண்டுக்கு ஒரு முறையோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ எப்படி வேண்டுமோ அப்படி தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஜீவன் சாரல் திட்டத்தில் இரண்டு வகையான வருடாந்திர திட்டங்கள் உள்ளன.
திட்டமிட்டு செயல்படுங்கள்
முதலாவதாக வருடாந்திர பேமெண்ட் விகிதமானது பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையில் நிலுவைத் தொகையானது செலுத்தப்படும். இதில் ஒருவர் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து தேர்வு செய்யலாம். இதில் எந்த அளவுக்கு பாலிசிதாரர்கள் அதிகமாக செலுத்துகின்றனரோ? அந்தளவுக்கு மாத மாதம் வருமானம் அதிகம் கிடைக்கும். ஆக எதிர்காலத்தில் உங்களுக்கு வருமானம் அதிகம் கிடைக்க வேண்டும் எனில், திட்டமிட்டு அதற்கேற்ப முதலீடு செய்து வைக்கலாம்.
உதாரணத்திற்கு ஒருவர் 10 லட்சம் ரூபாய் பிரீமியமாக செலுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் 52,500 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
எப்படி பெறலாம்?
இரண்டாவது பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் பட்சத்தில், பாலிசிதாரர் இறந்த உடன் செலுத்திய 100% தொகையும் திரும்ப கிடைக்கிறது. இதன்மூலம் பாலிசிதாரர் மட்டும் அல்ல, பாலிசிதாரரின் இணைக்கும் வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் கடன் வசதியும் உண்டு. இந்த திட்டத்தினை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனிலும் பெறலாம்.
யாருக்கு பலன்?
பொதுவாக தனியார் ஊழியர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், தங்கள் இறுதி காலத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தில் பாலிசி எடுத்தவுடன் வருமானம் பெறலாம். இதில் பாலிசிதாரரின் பெயரிலேயே பாலிசி இருக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும், பாலிசியை மற்றொரு நபருக்கு மாற்ற முடியாது. எனினும் இரண்டாவது திட்டத்தில் கணவர் இறந்து விட்டால், மனைவி வருமானத்தினை பெற முடியும்.


Click it and Unblock the Notifications