இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக, எல்ஐசி பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஒய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றது.
அதில் ஒன்று தான் எல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நிரந்தர வருமானம் தரக் கூடிய ஒரு திட்டமாகும்.
சரி இந்த திட்டத்தில் எப்படி இணையலாம். என்னென்ன ஆவணங்கள் தேவை. எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும். மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இந்த பாலிசியை எவ்வாறு எடுப்பது?
இந்த LIC- யின் இந்த ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுக்கலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். அதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு. அதிலும் ஓய்வுக்காலத்திற்கு பின்பு இப்படி நன்மை எனில், நிச்சயம் அனைவரும் எடுக்க வேண்டிய ஒரு பாலிசியாகும்.
வயது தகுதி என்ன?
LIC-ன் இந்த திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 85 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் என்பது வரையரை இல்லை. எல்ஐசி-யின் இந்த திட்டங்கள் பல தனிச் சிறப்புகளைக் கொண்டுள்ளது.
முதிர்வு தொகை எல்லை
முதிர்வு தொகை உடனடி ஆண்டுத் தொகையாகவோ அல்லது காலம் தாழ்த்திய நிலையில் கொடுக்கப்படும் முறைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடனடியான ஆண்டுத் தொகையினை நீங்கள் தேர்வு செய்தால், பிரீமியம் செலுத்திய உடனே வருவாய் கிடைக்க தொடங்குகிறது. இதே காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் திட்டத்தினை தேர்வு செய்திருந்தால், காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை பெறுவதற்கு, குறைந்தபட்ச கால அளவானது 1 வருடத்தில் ஆரம்பமாகிறது. அதிகபட்ச கால அளவானது 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் வசதி உண்டு
பாலிசி தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும். உடனடி ஆண்டுத் தொகை திட்டத்தில் இந்த வசதியானது F&J -வில் மட்டுமே கிடைக்கும். காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை திட்டத்திலும் இந்த தேர்வானது கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழுவதுமான பாதுகாப்பு கிடைக்கும்.
உத்திரவாத வருவாய் திட்டம்
இன்சூரன்ஸ் எடுப்பவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதம் மாதம் வருவாயினை பெறுவார்கள், ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேலை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டால், வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க நாம் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட விருப்பத்தினை பொறுத்து இருக்கும்.
உத்திரவாதம் அளிக்கப்பட்ட வரவு திட்டம்
காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் இந்த திட்டத்திலும், உறுதி செய்யப்பட்ட இந்த வருவாயானது கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த வருமானமானது, பாலிசியுடன் சேர்க்கப்படும். இந்த பாலிசி திட்ட காலத்திற்கு பிறகு சலுகை கிடைக்கும். அதோடு எல்ஐசியின் இந்த திட்டத்தில் பல சலுகைகள் உள்ளன.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications