எல்ஐசி ஜீவான் உமாங் பாலிசி ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் வருமானம், இன்சூரன்ஸ் என இரண்டையும் உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டத்தில் வாழும்போதே பயனாளர்கள் பெரும் பலனை அடைய முடியும்.
இந்த பாலிசி காலம் முடிவதற்குள் பாலிசிதாரர் இறந்து விட்டால், வாரிசுதாரர் அல்லது சட்டபூர்வ வாரிசுகளுக்கு பலன் கிடைக்கும்.
மொத்தத்தில் இது நீண்டகால நோக்கில் சிறந்த முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
100வது வயதில் கூட பலனடையலாம்
இந்த பாலிசியினை 90 நாட்கள் முதல் 55 வரையிலான நபர்கள் இணைந்து இதில் பலன் பெறலாம். இந்த பாலிசியில் 100வது வயதிலும் கூட பலனடையலாம்.
எல்ஐசி ஜீவன் உமாங் திட்டத்தால் வழங்கப்படும் நன்மைகளில் , இறப்பு பலன், உயிர் வாழும் பலன்கள், முதிர்வு பலன்கள் கிடைக்கும். இந்த பாலிசியில் கடன் வசதியும் உண்டு.
பிரீமியம் செலுத்தலாம்
இந்த பாலிசியில் 5 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என 4 பிரிவுகளாக பிரீமியம் செலுத்தலாம். இந்த திட்டத்தில் முதிர்வு காலம் வரை பிரீமியம் செலுத்தும் காலம் முடிவடையும்போது, 70 வயதாக இருந்தால், அந்த நபர் 100 வயது வரை முழு பலன்களையும் பெறலாம்.
பலன் எப்படி?
உங்களின் பிரீமிய காலத்திற்கு பிறகு ஆண்டுதோறும் மொத்த திட்ட முதலீட்டு மதிப்பில் 8% பலன் உங்களுக்கு கிடைக்கிறது. உங்களது வயது மற்றும் பிரீமிய தொகைக்கு ஏற்ப காலம் மாறுபடும். மேல் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரீமியம் முழுவதும் செலுத்தப்பட்டு விட்டால், 31வது ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். வருமானம் பெற விரும்பாதவர்கள் பிரீமிய காலம் முடிவடைந்த பின்னர் லம்ப் சம்ப் தொகையாக கிடைக்கும்.
ஒரே பாலிசியில் இரண்டு மாங்காய்
இந்த பாலிசியில் செலுத்தப்படும் பிரீமிய தொகைக்கு வரி சலுகையும் கிடைக்கும். இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாயாக இருக்கும். இதில் அதிகபட்ச வரம்பு என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை.
ஆக முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்புக்கு பாதுகாப்பு, வருமானத்திற்கு வருமானம் என ஒரே பாலிசியில் ஒரண்டு மாங்காய் எனலாம்.
ரூ.10 லட்சம் பெறலாம்
எல்ஐசி ஜீவன் உமாங் திட்டத்தில் 20 ஆண்டுகால பாலிசியில் 10 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்க வேண்டுமெனில், வருடத்திற்கு 50,000 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டியிருக்கும். பாலிசி காலத்திற்கு பிறகு பாலிசிதாரர் 10 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக பெறலாம்.
பாதுகாப்பு
எல்ஐசி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற அருமையான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அசத்தலான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கும் உங்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பலனடைய செய்யலாம். ஒரு வேளை பாலிசிதாரர் இல்லாவிட்டாலும், அவரின் குடும்பம் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்கும்.
ரைடர் பாலிசி
முதலீட்டாளர் தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால், இந்த பாலிசியின் கீழ் ஒரு டெர்ம் ரைடர் நன்மையும் கிடைக்கும். இந்த பாலிசியில் சந்தை ஆபத்தும் இல்லை.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications