LIC Kanyadan Policy: பெண் குழந்தைகளுக்கான எல்ஐசி-யின் செம திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, புதிதாக எல்ஐசி கன்யாதன் பாலிஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கொண்டு பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி கன்யாதன் சேமிப்பு திட்டத்தை பெண் குழந்தையின் தந்தை நிர்வகிக்கலாம். குழந்தைக்கு இந்த அக்கவுன்டில் எந்தப் பொறுப்பும் இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தந்தை இறக்க நேரிட்டால் மகளுக்கு பாலிஸியின் பலன்கள் போய்ச் சேரும். கஷ்டப்படக் கூடிய சூழ்நிலையில் குடும்பத்துக்கும் பெண் பிள்ளைக்கும் இந்த திட்டம் உதவும்.

LIC Kanyadan Policy: பெண் குழந்தைகளுக்கான எல்ஐசி-யின் செம திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

பாலிஸி திட்டக் காலம் 25 ஆண்டுகள். குறைந்தபட்ச பாலிஸி காலம் 13 ஆண்டுகள். அதிகபட்சம் 25 ஆண்டுகள். குழந்தையின் தந்தை 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

திட்ட அம்சங்கள்: தந்தை இறந்தால் பிரீமியம் செலுத்த தேவையில்லை-
துரதிர்ஷ்டவசமாக பாலிஸி காலத்தின்போது தந்தை இறந்துவிட்டால் மீதக் காலத்துக்கு பிரீமியம் செலுத்த தேவையில்லை.

விபத்தில் மரணம்- ஒருவேளை பாலிஸி காலத்தின் போது தந்தை இறந்துவிட்டால் உடனடியாக குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

விபத்து அல்லாத மரணம்- விபத்து காரணமாக மரணம் ஏற்படாவிட்டாலும் இந்த எல்ஐசி கன்யாதன் பாலிஸியில் உடனடியாக நிதி வழங்கும் வசதி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடும்பத்தாரின் உடனடி செலவுகள் மற்றும் நிலைமையைச் சமாளிப்பதற்காக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

வருடாந்திர வரவுகள்- பாலிஸி தாரரின் மகளுக்கு நிதிவசதி தரும் வகையில் கன்யாதன் பாலிஸியில் வருடாந்திர தொகைகள் தரப்படும். அதன்படி பாலிஸி முதிர்ச்சி அடையும் காலம் வரை ஆண்டுக்கு ரூ.50,000 பெண் குழந்தைக்குத் தரப்படும்.

திருமண சேமிப்பு- கன்யாதன் பாலிஸியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால் பெண் குழந்தையின் திருமணத்துக்கென சேமிப்பும் உள்ளது. தினமும் ரூ.75 சேமித்து வந்தால் பாலிஸிதாரர் குழந்தையின் திருமண வயதின்போது ரூ.14.5 லட்சம் கிடைக்கும். தினமும் ரூ.151 சேமித்து வந்தால் ரூ.31 லட்சம் மகளின் திருமணச் செலவுக்கு வந்து சேரும்.

பாலிஸிக்கான தகுதி: எந்தவொரு இந்திய குடிமகனும், NRI களும் கூட, இந்த திட்டத்தின் கீழ் தங்கள் மகளின் திருமணத்துக்கு பங்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இந்தச் சேவையை வழங்கும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் எந்தக் கிளையிலும் கணக்கைத் திறக்க முடியும். ஒரு பெண் குழந்தைக்கு இரண்டு கணக்குகள் திறக்க அனுமதி இல்லை.

பிற தகவல்கள்: 18 வயதுக்குப் பிறகு ஒரு பெண்ணின் உயர்கல்விக்காக அதிகபட்சமாக 50% தொகையை திரும்பப் பெறலாம். 10 வயதுக்கு முன், ஒரு பெண்ணின் பெயரில் கணக்கு தொடங்கி பயன்படுத்தலாம். பிறப்புச் சான்றிதழ், சிறுமி மற்றும் அவரது பாதுகாவலரின் முகவரிகள், அடையாளச் சான்று போன்ற ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் வழங்கப்பட வேண்டும்.

கணக்கு தொடங்க, குறைந்தபட்சம் ரூ. 250 அவசியம். 5 ஆண்டுகளுக்கு மாதாந்திர பிரீமியத்தைச் செலுத்தி தினசரி ரூ.75ஐ முதலீடு செய்தால் மகளின் திருமணத்துக்கு ரூ.14 லட்சம் கிடைக்கும்.
சுகன்யா சம்ரித்தி யோஜ்னா கணக்கை நாட்டில் (இந்தியாவில்) எந்த இடத்துக்கும் மாற்றலாம்.

ஒருவேளை பெண் குழந்தை இறந்தால், அந்த இறப்புச் சான்றிதழின் நகலுடன் கணக்கை முடித்துவிட்டு, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வட்டியுடன் சேர்த்து பாதுகாவலரிடம் கொடுக்கலாம். உயிருக்கு ஆபத்தான நோய் ஏற்பட்டால், கணக்கு 5 ஆண்டுகளில் முடிக்கப்படலாம்.

சரண்டர் மதிப்பு: உங்கள் எல்ஐசி கன்யாதன் பாலிசியை உங்களால் தொடர முடியவில்லை என்றால், நீங்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக பணம் செலுத்தியிருந்தால் எந்த நேரத்திலும் அதை சரணடைய செய்யலாம்.

பாலிசியை ஒப்படைத்தவுடன், உத்தரவாத சரணடைதல் மதிப்பு அல்லது சிறப்பு சரணடைதல் மதிப்புக்கு சமமான சரண்டர் மதிப்பின் அதிகமான தொகையை எல்ஐசி செலுத்தும்.

இறுதியாக, எல்ஐசி கன்யாதன் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால், பாலிஸி பத்திரத்தைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் உங்கள் குறைகளை அறிக்கையுடன் திருப்பித் தரலாம். எல்ஐசி உங்கள் கவரேஜை ரத்து செய்து, குறிப்பிட்ட தொகையை கழித்துக் கொண்டு, உங்கள் பிரீமியம் பணத்தை திருப்பித் தரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+