எல்ஐசி தன் வர்ஷா.. புதிய பாலிசி.. யாருக்கெல்லாம் பலன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) எல்ஐசி தன் வர்ஷா (866) திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு குளோஸ் எண்டட் திட்டமாகும்.

எல்ஐசி-யின் ஜன் தன் வர்ஷா என்பது பங்கு சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டமாகும். ஒற்றை பிரீமியம் உள்ள ஒரு லைஃப் இன்சூரன்ஸ் திட்டமாகும்.

இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரு அம்சங்களையும் சேர்த்து வழங்குகின்றது.

புதுசா வாகன இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா.. அப்படின்னா இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க! புதுசா வாகன இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா.. அப்படின்னா இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

நிதி  ரீதியாக சப்போர்ட்

நிதி ரீதியாக சப்போர்ட்

ஒரு வேளை பாலிசி எடுத்தவர் பாலிசி காலத்தில் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால், இந்த பாலிசி மூலம் நிதி உதவி கிடைக்கும். இது உங்கள் குடும்பத்தில் நீங்கள் இல்லாவிட்டாலும், நிதி ரீதியில் ஆவது பிரச்சனை ஏற்படாமல் வழிவகுக்கும். இதுவே அவர்களுக்கு பெரும் ஆறுதலாகவும் அமையும்.

இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் வருமான வரி விலக்கு உள்ளது.

பாதுகாப்பு & சேமிப்பு

பாதுகாப்பு & சேமிப்பு

எல்ஐசி இணைய தள அறிக்கையின் படி, இந்த பாலிசியின் முதிர்வு காலத்திலும் ஒரு கணிசமான தொகை கையில் கிடைக்கும். ஆக இது பாலிசிதாரர்களுக்கு பாதுகாப்பினையும் கொடுக்கிறது. அதேசமயம் முதிர்காலத்தில் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எனலாம்.

எப்போது எடுக்கலாம்?
 

எப்போது எடுக்கலாம்?

இந்த திட்டத்தினை அக்டோபர் 17, 2022 முதல் மார்ச் 31, 2023 வரையில் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என தெரிகிறது.

இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ.1,25000

அதிகபட்ச வரம்பு கிடையாது

வயது விவரம்

வயது விவரம்

பாலிசி காலம் 10 - 15 ஆண்டுகள்

குறைந்த பட்ச நுழைவு வயது - 3 வருடங்கள் (முடிவு) - பாலிசி காலம் 15 வருடம்

- 8 வருடங்கள் (முடிவு) - பாலிசி காலம் 10 வருடம்

அதிகபட்ச நுழைவு வயது - ஆப்சன் 1: 60 வயது

- ஆப்சன் 2: 40 வயது - பாலிசி காலம் 10 வருடங்கள்

- ஆப்சன்2: 35 வயது - பாலிசி காலம் 15 வருடங்கள்

பிரீமியம் செலுத்தும் காலம்

பிரீமியம் செலுத்தும் காலம்

பிரீமியம் செலுத்தும் காலம் 10 ஆண்டு அல்லது 15 ஆண்டுகள் என இரு வகையாக உள்ளது.

இந்த பாலிசிக்கு எதிராக கடன் வசதியும் உண்டு.

சரண்டர் வசதியும் உண்டு.

யாருக்கு எல்லாம்?

யாருக்கு எல்லாம்?

எல்ஐசி இணையத்தின் படி,இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும். இது மருத்துவம் அல்லாத வரம்பு, வயது, தேர்தெடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகையின் அடிப்படையில் கிடைக்கும்.

முதிர்வு பலன்

முதிர்வு பலன்

அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஒரு காப்பீடு தொகை மற்றும் திரட்டப்பட்ட உத்தரவாத சேர்த்தல்கள் மூலம், இந்த திட்டம் முதிர்வு காலத்தில் ஒரு உத்தரவாத தொகையினை கொடுக்கிறது.

இறப்பு பலன்

இறப்பு பலன்

ஒரு வேளை இறப்பு ஏற்பட்டாலும், பாலிசிதாரர் இறந்த ஆண்டிற்கான உத்தரவாத சேர்த்தல்கள் இருக்கும். இது தவிர இறப்பு பலனும் உண்டு.

ஆப்சன் 1: 1.25 மடங்கு காப்பீட்டு தொகை

ஆப்சன் 2 : 10 மடங்கு காப்பீட்டு தொகை (இதில் மட்டும் வரிச்சலுகை கிடைக்கும்)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC launched new dhan varsha plan: Benefits, maximum insurance cover and key details

LIC introduced dhan Varsha scheme, It is a closed ended plan. LIC's Dhan Varsha is a stock market risk free plan. A single premium life insurance plan.
Story first published: Monday, October 17, 2022, 17:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X