இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்ஐசி காலத்திற்கு ஏற்ப புது புது காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்காக எல்ஐசி அம்ரித்பால் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் பலன்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
அம்ரித்பால் திட்டம்: குழந்தைகளின் மேற்படிப்பு செலவுகளுக்கு தேவையான பணத்தை சேர்த்து வைக்கும் வகையில் அம்ரித்பால் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பிறந்து 30 நாட்கள் ஆன குழந்தைகள் தொடங்கி 13 வயது வரையிலான குழந்தைகள் வரை இணைய முடியும்.

அதே போல முதிர்வு காலமானது குழந்தைகள் 18 வயதை அடைந்ததில் இருந்து 25 வயதினை எட்டும் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பாலிசி காலம், சிங்கிள் ப்ரீமியத்துக்கு 5 ஆண்டுகளாகவும், லிமிடெட் ப்ரீமியத்துக்கு 10 ஆண்டுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்ச பாலிசி காலம் சிங்கிள் ப்ரீமியம் மற்றும் லிமிடெட் ப்ரீமியம் இரண்டிற்கு 25 ஆண்டுகளாகும்.
ப்ரீமியம் செலுத்தும் காலம் லிமிடெட் ப்ரீமியத்துக்கு 5, 6 மற்றும் 7 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே சிங்கள் ப்ரீமியத்துக்கு ஒரே முறை ப்ரீமியம் செலுத்தினாலே போதும்.
அம்ரித்பால் திட்டத்தில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாய் ஆகும். அதிகபட்ச தொகை என வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
குழந்தைக்கு 18 வயது நிரம்பிய உடன் இந்த பணத்தை திரும்ப எடுக்க முடியும். அதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையுடன் கூடுதல் பலன்களும் கிடைக்கும். ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் இருக்கு உத்தரவாத தொகையில் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 80 ரூபாய் என கூடுதலாக சேர்க்கப்படும். பாலிசி செலுத்த தொடங்கிய ஆண்டு முதல் முதிர்ச்சி அடையும் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் இது சேர்க்கப்படும்.
உதாரணமாக உங்களுக்கான உத்தரவாத தொகை 5 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். அது ஆயிரங்களாக பிரிக்கப்பட்டால் 500 என்ற எண்ணிக்கை வரும். எனவே 500 ஆயிரங்களுக்கு தலா 80 ரூபாய் எனில் 40 ஆயிரம் ரூபாய் அடிப்படை உத்தரவாத தொகையில் சேர்க்கப்படும். இது முதிர்வு காலம் வரை தொடரும். எனவே மேற்படிப்பு மற்றும் பிற செலவுகளுக்கு இதில் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்கிறது எல்ஐசி.
முதிர்வு தொகையை தவணைகளாக 5, 10 அல்லது 15 ஆண்டுகள் என பிரித்து வாங்கி கொள்ளலாம். இந்த காப்பீடு திட்டத்தில் ரிஸ்க் கவரும் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு 8 வயது நிரம்பிய பிறகு ரிஸ்க் கவரேஜூம் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல அதிகபட்ச அடிப்படை தொகையை தேர்வு செய்பவர்களுக்கும், ஆன்லைன் மூலம் காப்பீட்டை பெறுபவர்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிசி தொடங்கிய 2 ஆண்டுகளில் அதன் மீது கடன் கூட பெற முடியும் என எல்ஐசி அறிவித்துள்ளது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications