LIC கொடுக்கும் அருமையான வாய்ப்பு.. இனி ஓய்வுகாலத்தை பற்றி கவலைபட வேண்டாம்..!!

இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நியாபகம் வருவது எல்.ஐ.சி தான். பல அதிரடியான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது.

அது குழந்தைகள் முதல் பெரியோர் வரையில், கல்வி, திருமணம், மருத்துவம், ஓய்வுகாலம் இப்படி பல வகைகளில் பல அதிரடியான திட்டங்களை வழங்கி வருகின்றது.

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு ஆசையே இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும், வயதான காலத்திலாவது ஒரு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழவேண்டும். அதாவது வயதான காலத்திலும் யாரையும் சாராமல், சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்பது தான்.

பென்ஷன் மூலம் பலன்

பென்ஷன் மூலம் பலன்

இது அரசு ஊழியர்கள் எனில் கிடைக்கும் பென்ஷன் தொகை மூலம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பர். இதே மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் பலரும் பென்ஷன் திட்டங்கள் மூலம் இது போன்ற பலனை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் முன்னணி மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-க்கு நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

 எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம்

எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம்


எல்ஐசி அவ்வப்போது பல அதிரடியான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தினை ஜூலை 1 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசியின் சிறப்பம்சமே ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும். பாலிசியினை தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும். இந்த பாலிசியினை எல்ஐசி அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனிலோ பெற்றும் கொள்ளலாம்.

வயது தகுதி

வயது தகுதி

இந்த பாலிசியினை 40 வயது முதல் 80 வயது வரையில் எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரர் இந்த திட்டத்தினை எடுக்கும்போது அதிக தொகையினை ஒரே பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பாலிசிதாரர் அவரின் வாழ் நாள் முழுவதும் ஒரு வருமானத்தினை பெறலாம். இதில் பங்கு சந்தை சார்ந்த ரிஸ்க் இல்லை.

இரு பாலிசி வகைகள் உண்டு

இரு பாலிசி வகைகள் உண்டு

முதல் வகை தனி நபர் பாலிசி - 100% திரும்ப தரும் பிரீமியம். இரண்டாவது ஜாய்ண்ட் லைஃப் 100% திரும்ப தரும் பிரீமியம் என இருவகைகள் உண்டு. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் தொகையாவது செலுத்த வேண்டும். அதாவது மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. ஆண்டு ஆரையாண்டு, மாதாந்திர முறைகளில் தொகையை செலுத்தவும் வசதி உண்டு.

கடன் வசதி உண்டா?

கடன் வசதி உண்டா?

இந்த பாலிசியினை பெற்ற ஆறு மாதத்திற்கு பிறகு கடன் பெறலாம். 6 மாதத்திற்கு பிறகு சரண்டர் செய்யலாம். பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினி பிரீமியம் தொகையை பெறுவார்கள். இந்த பாலிசியில் முதிர்ச்சி பலன் என்பது கிடையாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+