எல்ஐசி அறிமுகப்படுத்திய 100 ரூபாய் SIP.. இனி எல்லோரும் இன்வெஸ்ட் பண்ணலாம்..!!

முதலீட்டாளர்கள் இப்போது எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் (LIC MF) திட்டங்களில் வெறும் 100 ரூபாயில் எஸ்ஐபியைத் தொடங்கலாம். எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச தினசரி எஸ்ஐபி தொடங்குவதற்கு ஏதுவாக ரூ. 100 ஆகக் குறைந்த முதலீட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. இது இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது.

இதன்மூலம் இனி முதலீட்டாளர்கள் இப்போது வெறும் ரூ. 100 எஸ்ஐபியைத் தொடங்கலாம். இந்த எஸ்ஐபிகள் மியூச்சுவல் ஃபண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு பொருந்தும். கூடுதலாக, எல்ஐசி எம்எஃப் அதன் லிக்விட் ஃபண்டில் டெய்லி எஸ்ஐபி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளர்களின் பணத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை அளித்துள்ளது.

எல்ஐசி அறிமுகப்படுத்திய 100 ரூபாய் SIP.. இனி எல்லோரும் இன்வெஸ்ட் பண்ணலாம்..!!

மியூச்சுவல் ஃபண்ட் மீதான ஆர்வத்தில் அனைவரும் முதலீடு செய்யும் வகையில், எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர SIP வரம்பை ரூ.200 ஆகவும், காலாண்டுக்கான குறைந்தபட்ச SIP வரம்பை ரூ.1,000 ஆகவும் குறைத்துள்ளது. இவை அனைத்தும் 16 அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு, குறைவான வருமானம் கொண்டவர்களும் இனி எளிதாக எஸ்ஐபியில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்ஐபி முதலீடுகளை அதிகரிக்க மாற்றியமைக்கப்பட்ட ஸ்டெப்-அப் வசதியும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்டெப்-அப் வசதியின் குறைந்தபட்சத் தொகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் குறைந்தபட்சத் தொகை ரூ.100 ஆகவும், அதற்குப் பிறகு ரூ.1 ஆக முதலீடு செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஒரு ஸ்டெப்-அப் SIP ஆனது முதலீட்டாளர்களுக்கு SIP இன் அளவை உயர்த்த உதவுகிறது.

முதலீட்டாளர்கள் இப்போது தங்கள் எஸ்ஐபி தொகையை ரூ.100 முதல் தொடங்கலாம். இந்த திட்டங்கள் அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தாது. எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் ELSS வரி சேமிப்பு திட்டம் மற்றும் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றில் இது பொருந்தது.

இந்த திட்டங்கள் பொதுவாக, குறைவாக ஊதியம் பெறுபவர்கள், சம்பாதிக்கத் தொடங்குபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், ஈக்விட்டி எம்எஃப்களில் முதலீடு செய்யாதவர்கள் இந்த மைக்ரோ எஸ்ஐபிகளுடன் முதலீடுகளை தொடங்கலாம்.

இந்த புதிய வரம்புகள் அதிகமான மக்களை, குறிப்பாக இளைய முதலீட்டாளர்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய ஊக்குவிக்கும். எனவே எஸ்ஐபி 100 ரூபாயில் தொடங்குவதன் மூலம், எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் நாடு முழுவதும் உள்ள சில்லறை முதலீட்டாளர்களிடமிருந்து மியூச்சுவல் ஃபண்ட் சந்தைகளில் அதிக முதலீடுகளை பெறும்.

புதிய குறைந்தபட்ச SIP வரம்புகள்: தினசரி SIP: ரூ. 100 ஆகும். அதற்கு பிறகு ரூ.1 முதல் அதிக முறை தொடங்கலாம். இதன் குறைந்தபட்சம் 60 தவணைகள் ஆகும்

மாதாந்திர SIP: ரூ. 200 ஆகும். அதன் பிறகு ரூ.1 முதல் அதிக முறை தொடங்கலாம். இதன் குறைந்தபட்சம் 30 தவணைகள் ஆகும்

காலாண்டு SIP: ரூ. 1,000 ஆகும். அதன் பிறகு ரூ.1 முதல் அதிக முறை தொடங்கலாம். குறைந்தபட்சம் 6 தவணைகள் ஆகும்

தினசரி எஸ்ஐபிகளை அனைத்து வணிக நாட்களிலும் முதலீடு செய்யலாம். இதன் மாதாந்திர, காலாண்டு எஸ்ஐபிகளை மாதத்தின் 1 முதல் 28 வரை தொடங்கலாம்.

முன்னதாக ஃபண்ட் ஹவுஸுடன் இணைந்து குறைந்தபட்சம் ரூ.250 மாதம் முதலீடு செய்யும் மைக்ரோ எஸ்ஐபியை உருவாக்க செபி தலைவர் மாதபி பூரி புச் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எல்ஐசியின் இந்த மியூச்சுவல் ஃபண்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வரம்புகள், இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்திய செபி வழிகாட்டுதல்களின் படி எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அதிக இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களை ஈர்க்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.100 தினசரி எஸ்ஐபியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆர்.கே.ஜா கூறியுள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டில் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்திய காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின் (PLFS) படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 56% தொழிலாளர்கள் உள்ளனர். இந்த மைக்ரோ எஸ்ஐபிகளின் அறிமுகம், சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்து அதிக சில்லறை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் பங்கேற்க உதவும் என்றும் இதன்மூலம் இந்தியா முழுவதும் நிதி சேர்க்கைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகளின் சங்கம் (AMFI) பான் மற்றும் PEKRN அடிப்படையிலான தனித்துவமான முதலீட்டாளர்கள் செப்டம்பர் 2024 இல் 5 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+