எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது புதிய தினசரி முறையான முதலீட்டுத் திட்டத்தை (SIP) ரூ. 100 முதல் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முயற்சியானது, மைக்ரோ-எஸ்ஐபிகளை மேம்படுத்துவதற்கும், சில்லறை முதலீட்டாளர் பங்கேற்பை விரிவுபடுத்துவதற்கும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்முயற்சியுடன் இணைந்துள்ளது.
அதன்படி, இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் தினசரி எஸ்ஐபி தற்போதைய ரூ.300ல் இருந்து ரூ.100 ஆகக் குறைக்கப்படும். மாதாந்திர எஸ்ஐபி ரூ.1,000ல் இருந்து ரூ.250 ஆகக் குறையும், காலாண்டு எஸ்ஐபிக்கு தற்போது ரூ.3,000க்கு பதிலாக வெறும் ரூ.750 ஆக இருக்கும்.

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட், தினசரி ரூ.100 எஸ்ஐபியை அறிமுகப்படுத்துவது, முதலீட்டாளர்களுக்கு எளிதாக கிடைக்கவும், குறைவான விலையில் வாங்கவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறைவான வருமானம் உள்ளவர்களின் செல்வத்தை உருவாக்குவதையும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தலைவர் ஸ்வேதா ரஜினி கூறியுள்ளார்.
அதேபோல், ரைட் ஹாரிஜன்ஸின் நிறுவனர் மற்றும் நிதி மேலாளர் அனில் ரெகோ இதுகுறித்த தகவல்களை விரிவாக பகிர்ந்துள்ளார்.
அனைவருக்குமான எஸ்ஐபி: SIP தொகையை ரூ.100 ஆகக் குறைப்பது ஒட்டுமொத்த அளவிலான முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருமானப் பிரிவுகளில் முதலீடு செய்வதற்கு முக்கியமானதாக இருக்கும்
சேமிப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் பழக்கம்: தினசரி SIP கள் வழக்கமான சேமிப்பு மற்றும் முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது. இது நிதி கல்வியறிவு மற்றும் நீண்ட கால சேமிப்பை அவசியமாக்குகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் இலக்கு: மியூச்சுவல் ஃபண்ட் சந்தைகளில் அதிக மக்கள் பங்கேற்கும் வாய்ப்பை உறுதிசெய்து, நிதிச் சேர்க்கையின் ஒட்டுமொத்த இலக்கை அதிகரிக்க செய்கிறது.
எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் தினசரி ரூ 100 எஸ்ஐபி யார் யாருக்கு பொருந்தும்?
குறைந்த வருமானம் கொண்ட முதலீட்டாளர்கள்: குறைந்த செலவழிப்பு வருமானம் கொண்ட தனிநபர்கள் சிறிய தொகையுடன் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
இளம் தொழில் வல்லுநர்கள்: தங்கள் வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், சிறிய தொகையில் தங்களது பணத்தை சேமித்து முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள்: சரியான வருமானம் இல்லாத கடை உரிமையாளர்கள், சிறிய, அதிக நெகிழ்வான முதலீட்டுத் தொகைகளை விரும்புகிறார்கள்.
நிதி ஒழுக்கத்தை விரும்பும் தனிநபர்கள்: தினசரி முதலீடு செய்வதன் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள விரும்புவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இது ஃபண்ட் ஹவுஸ் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் நடவடிக்கை ஆகும்.
முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை?
முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது அவசியம். இந்த முதலீடு குறுகிய கால அல்லது நீண்ட காலமாக இருந்தாலும் உங்கள் நிதி இலக்குகளுக்கு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தலைவர் ஸ்வேதா ரஜினி கூறியுள்ளார். ரிஸ்கை சமநிலைப்படுத்த உங்கள் முதலீடுகளை வெவ்வேறு பிரிவுகளிலும் சந்தை வரம்புகளிலும் பன்முகப்படுத்த வேண்டும் எனவும் அப்படி செய்தால், காலப்போக்கில் உங்கள் முதலீடு சிறப்பான முறையில் வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications