பொதுவாக நம்மில் பலருக்கும் கனவு இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்தில் ஆவது நிதி ரீதியாக யாரையும் சாராமல் வாழ வேண்டும் என நினைப்போம். இதனை அடைய சில திட்டங்கள் இருந்தாலும் இருந்தாலும், எல்ஐசி-யின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் சிறந்த ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் உள்ள 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஏற்றதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும்.
கடைசி தேதி
இன்றைய காலகட்டத்தில் பென்சன் என்பது அந்தளவுக்கு அவசியமான ஒன்று என்பதை பலரும், கொரோனாவின் வருகைக்கு பின்னர் உணர்ந்திருக்கலாம். இந்த திட்டத்தில் சேர்வதற்கான காலம் மார்ச் 31, 2020 என இருந்த நிலையில், இது பின்னர் மார்ச் 31, 2023 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆக இந்த திட்டத்தில் இணைய இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே கால அவகாசம் என்பது உள்ளது.
எப்படி இணைவது?
மத்திய அரசின் வழிகாட்டுதலோடு இந்த திட்டத்தினை எல்ஐசி நிர்வகித்து வருகின்றது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில் உங்களுக்கு 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். நீங்கள் இணையத்திலோ அல்லது அலுவலகத்தில் சென்றே இணைந்து கொள்ளலாம்.
ஓய்வூதியம்
குறிப்பாக சந்தாதாரர் தேர்வு செய்யும் ஓய்வூதிய முறையை பொறுத்து PMVVY, 10 வருட பாலிசி காலத்திற்கான ஓய்வூதியத்தினை வழங்குகிறது. 10 வருட காலத்தில் ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், பாலிசியின் கொள்முதல் விலை பயனாளிக்கும் திருப்பி தருவது போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.
இத்திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச முதலீடு 15 லட்சம் ரூபாய். மேலும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் முடிவு செய்யப்படுகிறது.
வட்டி எவ்வளவு?
ஒரு மூத்த குடிமக்கள் PMVVY திட்டங்களில் சேர்வதற்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. பாலிசி காலத்தின் போது ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பாலிசியை சரண்டர் செய்யக்கூடிய வசதி உள்ளது. இந்த திட்டத்தில் மார்ச் 31, 2023 வரை LIC PMVVY ல் சேரும் பாலிதாரர்களுக்கு, வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.40% வரையில் கிடைக்கிறது.
விருப்பப்படி ஓய்வூதியம்?
இத்திட்டத்தில் முதிர்வுக்கு பிறகு பயனாளி மாத வாரியாக, காலாண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக, ஆண்டு வாரியாக என விருப்பப்படி தேர்வு செய்து ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு தீவிர நோய் தாக்கம் ஏற்பட்டால், முதிர்வுக்கு முன்னதாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். கணவன் அல்லது மனைவிக்காகவும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பாலிசி வாங்கி மூன்று ஆண்டுகளில் கடன் வசதியும் உண்டு.
பாலிசிதாரர் இறந்துவிட்டால்?
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால் மொத்த தொகையும் நாமினிக்கு அல்லது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுவிடும்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சமே கணவன், மனைவி இருவருமே இணைந்து முதலீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வுக்காலத்தில் மிகப்பெரிய அளவில் பலன்களை பெறலாம்.
ரூ.18,500 எப்படி சாத்தியம்?
இந்த திட்டத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து தலா 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருந்தால், மொத்த நிதி 30 லட்சம் ரூபாய். இதன் மூலம் கணவன், மனைவி இருவருக்கும் மாதம் 9250 ரூபாய் என மொத்தமாக 18500 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications