எல்ஐசி பாலிசி: வெறும் ரூ.45 முதலீடு, 100 வயது வரை வருடம் 36000 ரூபாய்..!

ஆயுள் காப்பீடு என்பதை எப்போதும் முதலீட்டுத் திட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது, அது உங்கள் குடும்பத்தைக் காக்கும் கருவி மட்டுமே. ஆனால் தற்போது சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு வருமானத்தை கொடுத்து, ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறது.

இப்படிப்பட்ட ஒரு திட்டத்தைத் தான் எல்ஐசி நிறுவனம் தினமும் 45 ரூபாய் என்ற சிறிய முதலீட்டுத் தொகை கொண்ட திட்டத்தை வழங்குகிறது.

எல்ஐசி நிறுவனம்

எல்ஐசி நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அதிகப்படியான வருமானத்தையும், ஆயுள் காப்பீட்டையும் ஓரே திட்டத்தில் அளிக்கும் திட்டத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் பெயர் ஜீவன் உமங், இதில் முதலீடு செய்பவர்களுக்கு ப்ரீமியம் செலுத்தும் காலம் முடிந்த பின்பு முதிர்வு காலம் வரையில் வருடாந்திர உயிர்வாழ்வு நன்மைகளை வழங்குகிறது.

ஜீவன் உமங் திட்டம்

ஜீவன் உமங் திட்டம்

இதேபோல் முதிர்வு காலம் முடிந்த பின்பு அல்லது பாலிசி காலத்திற்குள் பாலிசிதாரர் இறந்தால் lump sum தொகை அளிக்கப்படுகிறது. அதாவது இத்திட்டம் வருமானத்தையும், ஆய்வு காப்பீட்டையும் ஒன்றாக இணைத்து அளிக்கிறது.

தினமும் 45 ரூபாய்

தினமும் 45 ரூபாய்

உதாரணமாக 26 வயதில் ஒருவர் 4.5 லட்சம் ரூபாய் அளவிலான இன்சூரன்ஸ் கவர் உடன் ஜீவன் உமங் திட்டத்தைத் தேர்வு செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு மாதம் 1350 ரூபாய் ப்ரிமியம் அதாவது தினமும் 45 ரூபாய் அளவில் ப்ரீமியம் தொகையை 30 வருடங்களுக்குத் செலுத்த வேண்டும்.

30 வருடம்

30 வருடம்

மாதம் 1350 ரூபாய் எனில் 30 வருடத்திற்கு 4,86,000 ரூபாய். இந்த 30 வருடத்திற்கு எவ்விதமான தடையும் இல்லாமல் ப்ரீமியம் செலுத்தினால் 31வது வருடம் முதல் ஆண்டுக்கு 36000 ரூபாய் பாலிசிதாரர் கணக்கில் வைப்பு வைக்கப்படும். இந்தத் தொகை பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையில் அதிகப்படியாக 100 வயது வரை அளிக்கப்பட உள்ளது.

வரிச் சலுகை

வரிச் சலுகை

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தப் பாலிசிக்குச் செலுத்தப்படும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும். எல்ஐசி ஜீவன் உமங் பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட அடிப்படைத் தொகை ரூ. 2 லட்சம். பாலிசிதாரர் 100 வயதிற்குள் இறந்துவிட்டால், நாமினிக்கு மொத்தத் தொகை வழங்கப்படும், அதை அவர்களும் தவணைகளில் எடுக்கலாம்.

100 வயது வரை

100 வயது வரை

பாலிசிதாரர் 100 வயது வரை உயிருடன் இருக்கும் நிலையில் பிரீமியம் செலுத்தும் காலத்தின் இறுதி வரை,ஒவ்வொரு ஆண்டும் அடிப்படைத் தொகையில் 8 சதவிகிதம் உயிர்வாழும் பலன் (survival benefit) செலுத்தப்படும். ஜீவன் உமங் பாலிசியை 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என நான்கு முதிர்வு காலங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+