இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மிகவும் நம்பகமான முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். எல்ஐசி-யில் பெரும்பாலான வருமானம் கொடுக்கும் திட்டங்கள் உள்ளன.
அதன் பல திட்டங்கள் வரி சேமிப்பிற்கும் உதவுகின்றன. இந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டைத் தேர்வு செய்ய பல விருப்பங்களை வழங்குகின்றன.
நீங்கள் எல் ஐ சி மூலம் முதலீடு செய்ய விரும்பினால் உங்களுக்கு எல் ஐ சி ரெகுலர் பிரீமியம் யூனிட் லிங்க்டு பிளான் எஸ் ஐ ஐ பி-யில் முதலீடு செய்யலாம்.
21 ஆண்டுகளுக்கு முதலீடு
எல்ஐசி-யின் இந்த திட்டத்தில் 21 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 40,000 ரூபாய் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் 3 மடங்கு தொகையானது கிடைக்கும். இந்த முறையான முதலீட்டு காப்பீட்டுத் திட்டம் SIIP, முதலீட்டாளர்களுக்கு 21 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்.
எப்படி பிரீமியம் செலுத்தணும்?
பிரீமியத்தை நீங்கள் மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை செலுத்திக் கொள்ளலாம். இது உங்களின் விருப்பத்தினை பொறுத்து தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் அரையாண்டுக்கு ஒரு பிரீமியம் செலுத்த வேண்டுமெனில் 22,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 12,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதே மாதம் 4000 ரூபாய் செலுத்த வேண்டிருயிருக்கும். நீங்கள் மொத்தமான பிரீமியம் செலுத்தும்போது உங்களுக்கு குறைவாக செலுத்த வழிவகுக்கலாம். தோராயமாக ஒரு நாளைக்கு 133 ரூபாயாகும்.
முதிர்வு தொகை எவ்வளவு?
21 ஆண்டுகளுக்கு நீங்கள் மாதம் 4000 ரூபாய் செலுத்தினால், உங்களின் மொத்த முதலீடு 10,08,000 ரூபாயாக செலுத்த வேண்டியிருக்கும். 21 ஆண்டுகளுக்கு பிறகு 35 லட்சம் ரூபாயினை பெறலாம். SIIP திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு 4,80,000 ரூபாய் காப்பீட்டினையும் வழங்குகிறது.
என் ஏ வி
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் இன்சூரன்ஸ் பிளான் (SIIP)ல் முதலீட்டாளர்கள் 21 ஆண்டுகளுக்கு பிரிமீயம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டத்தின் NAV விகிதம் எல் ஐ சி-யின் இணையதளத்தில் அப்டேட் ஆகிறது எனலாம். மொத்தத்தில் இந்த திட்டத்தில் இன்சூரன்ஸ் மற்றும் முதலீட்டின் சலுகையினை பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications