எல்ஐசி தனது ஜீவன் அக்ஷய் VII மற்றும் புதிய ஜீவன் சாந்தி உள்ளிட்ட திட்டங்களின் வருடாந்திர விகிதங்களை திருத்தம் செய்துள்ளது.
இந்த திருத்தமானது பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதன் மூலம் மாற்றப்பட்ட புதிய வருடாந்திர திட்டங்கள் மூலம் இந்த பாலிசியினை பெற்றுக் கொள்லலாம்.
இந்த புதிய வருடாந்திர தொகையினை மாற்றப்பட்ட விகிதங்களுடன் தற்போது விற்பனையில் உள்ளன.
இணையத்தில் தகவல்கள்
இந்த வருடாந்திர தொகையினை எல்ஐசி-யின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள கால்குலேட்டர் மூலம் கணக்கிட்டு கொள்ளலாம். இந்த திட்டங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு licindia.in என்ற வலைதளம் அல்லது கிளையை நேரிடையாக தொடர்பு கொண்டும் பெறலாம்.
எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டம் VII
எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டம் மூத்த குடிமக்களுக்கான ஒரு துல்லியமான ஓய்வூதிய திட்டமாகும். இது ஒரு சிறந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டமாகும். இது ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசியாகும். ஆக இந்த திட்டத்தின் தொடக்கத்தில் உங்களின் விருப்பத்திற்குகேற்ப நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை பெறுவீர்கள். அதோடு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப மாத ஓய்வூதியம் பெறலாம்.
மணி பேக் சலுகை
இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 30 வயது ஆகும். அதிகபட்சம் 85 வயதாகும். அதே போல குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் என்பது இதில் இல்லை. உங்களது பாலிசி முதிர்ச்சிகென்று இதில் அதிகபட்ச வயது இல்லை. அதோடு இந்த பாலிசியின் சலுகைகளை நீங்கள் மணி பேக்காக பெறலாம்.
மாத மாதம் வருமானம்
உங்கள் ஓய்வூதியமானது ஒரு முறை பிரீமியம் செலுத்தியவுடன் தொடங்கி விடுகிறது. ஓய்வூதியத்தினை செலுத்தும் முறை நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதை சார்ந்திருக்கும். உங்களால் வருடாந்திர ஓய்வூதியம், அல்லது காலாண்டு, மாதாந்திரம் என்று பெற்றுக் கொள்ள முடியும்.
வரி சலுகைகள் உண்டு
எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டத்தில், மற்ற பாலிசிகளை போலவே வருமான வரி சலுகைகள் உண்டு. பிரீமியங்களுக்கான வரி என்பது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் பெறும் ஓய்வூதியம் வரிகுட்பட்டிருக்கும். ஆனால் பிரீமியத்திற்காக நீங்கள் வரி செலுத்த வேண்டி இருக்காது.
எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி திட்டம் 858
எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுக்கலாம். இது ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். அதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு. LIC-ன் இந்த திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 85 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் என்பது வரையரை இல்லை.
முதிர்வு தொகை எல்லை
முதிர்வு தொகை உடனடி ஆண்டுத் தொகையாகவோ அல்லது காலம் தாழ்த்திய நிலையில் கொடுக்கப்படும் முறைகளை எடுத்துக் கொள்ளலாம். உடனடியான ஆண்டுத் தொகையினை நீங்கள் தேர்வு செய்தால், பிரீமியம் செலுத்திய உடனே வருவாய் கிடைக்க தொடங்குகிறது. இதே காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் திட்டத்தினை தேர்வு செய்திருந்தால், காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை பெறுவதற்கு, குறைந்தபட்ச கால அளவானது 1 வருடத்தில் ஆரம்பமாகிறது.
கடன் வசதி உண்டு
பாலிசி தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. இன்சூரன்ஸ் எடுப்பவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதம் மாதம் வருவாயினை பெறுவார்கள், ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேலை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டால், வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க நாம் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட விருப்பத்தினை பொறுத்து இருக்கும்.
உத்திரவாதம் அளிக்கப்பட்ட வரவு திட்டம்
காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் இந்த திட்டத்திலும், உறுதி செய்யப்பட்ட இந்த வருவாயானது கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த வருமானமானது, பாலிசியுடன் சேர்க்கப்படும். இந்த பாலிசி திட்ட காலத்திற்கு பிறகு சலுகை கிடைக்கும். அதோடு எல்ஐசியின் இந்த திட்டத்தில் பல சலுகைகள் உள்ளன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications