எல்ஐசி-யின் முத்தான திட்டங்கள்.. யாருக்கெல்லாம் பயன்.. சலுகைகள் என்ன.. இதோ முக்கிய விவரங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் நியாபகத்திற்கு வருவது எல்ஐசி தான். பொதுத்துறையை சேர்ந்த நிறுவனமானது, பல தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பல அதிரடியான திட்டங்களை கொடுத்து வருகின்றது.

 

அந்த வகையில் நடப்பு ஆண்டில், எல்ஐசி-யில் உள்ள சிறந்த திட்டங்கள் பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். இந்த திட்டங்களில் யாரெல்லாம் இணையலாம். எவ்வாறு இணையலாம்.

 ஏன் டெலிகாம் கட்டணங்கள் உயர்கிறது..? இந்தியாவில் மட்டும் என்ன பிரச்சனை..! ஏன் டெலிகாம் கட்டணங்கள் உயர்கிறது..? இந்தியாவில் மட்டும் என்ன பிரச்சனை..!

ஏன் இந்த திட்டங்கள் சிறந்தவையாக உள்ளன. மற்ற விவரங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

எல்ஐசி-யின் ஜீவன் அமர் திட்டம்

எல்ஐசி-யின் ஜீவன் அமர் திட்டம்

நாம் இன்று பார்க்கவிருக்கும் முதல் திட்டம் எல்ஐசி-யின் ஜீவன் அமர் திட்டம். இந்த திட்டம் ஒரு டெர்ம் திட்டமாகும். அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையில் இந்த திட்டத்தில் காப்பீடு பெறலாம்.

இரண்டாவது எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டம். இந்த திட்டமானது ஒரு எண்டோவ்மெண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் பாலிசி காலம் முடியும் வரையில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஜீவன் அமர் திட்டம்- வயது தகுதி

ஜீவன் அமர் திட்டம்- வயது தகுதி

 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும். இதில் இரண்டு வகையான மரணத்திற்கு பின்பு கையில் பணம் வரும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினி பணத்தை மொத்தமாகவோ, அல்லது 5, 10, 15 ஆண்டுகளுக்கு தவணைகளாகப் பிரித்தோ வாங்கிக் கொள்ளலாம். இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம். ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம் இப்பாலிசிகள் 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுக்கலாம். பாலிசிதாரரின் 80 வயது வரை காப்பீடு பெறலாம். அதாவது 20 வயதுக்காரர் பாலிசி எடுத்தால் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டுக் காலம்

 

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டம்
 

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டம்

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டத்தில் போனஸ் அதிகம் இருக்கும். பங்கு சந்தை அபயாங்கள் கிடைக்கும். முதிர்வு ஆண்டு வரை பிரீமியம் செலுத்த வேண்டாம். குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான சிறந்த ஆப்சன் எனலாம். இந்த பாலிசியில் விபத்து காப்பீடு மற்றும் வாழ் நாள் காப்பீடு பெற ரைடர்ஸ் பாலிசிகள் வசதி உண்டு. கட்டண பிரீமியத்திற்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். இதெ முதிர்வு தொகைக்கு 10(10டின் படி வரி சலுகையுண்டு.

ஜீவன் லாப் திட்டத்தில் வயது தகுதி

ஜீவன் லாப் திட்டத்தில் வயது தகுதி

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டத்தில் குறைந்தபட்சம் 8 வயது நிறைவு பெற்று இருக்க வேண்டும். இதே அதிகபட்ச வயதினை எடுத்துக் கொண்டால், 16 ஆண்டு பாலிசியில் 59 வயதாகும். இதே 21 ஆண்டு பாலிசியில் 54 வயது அதிகபட்சமாகும்.

 

ஜீவன் லாப் திட்டத்தில் காப்பீடு

ஜீவன் லாப் திட்டத்தில் காப்பீடு

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீடு என்பது 2 லட்சம் ரூபாயாகும். இதில் அதிகபட்ச வரம்பு கிடையாது.

இந்த பாலிசியில் 16 ஆண்டுகள் எனில் 10 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதே 21 வருட பாலிசி எனில் 15 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதே 25 வருட பாலிசி எனில் 16 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம்

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம்

 

எல்ஐசி-யின் ஜீவன் லக்சய திட்டம். இந்த திட்டம் ஒரு எண்டோவ்மெண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வரையில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால், இறப்பு பலனாக 10% SA பாலிசி முதிர்வு காலம் வரையில் கிடைக்கும். இது மாதாமாதம் ஒரு வருமானமாகவே கிடைக்கும்.
பாலிசி முதிர்வு காலம் வரும்போது முதிர்வு தொகை கிடைக்கும். (தொடர்ந்து பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியதில்லை)

 

எல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம்

எல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம்

இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும். வாழ் நாள் முழுவதும் இந்த திட்டத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கும் இந்த திட்டத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். இது நிரந்தர வருமானம் தரக் கூடிய ஒரு நல்ல திட்டமாகும்.

எல்ஐசி-யின் இந்த சூப்பரான ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுத்துக் கொள்ளலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். இதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு.

ஜீவன் சாந்தி திட்டத்தினை யாரெல்லாம் எடுக்கலாம்?

ஜீவன் சாந்தி திட்டத்தினை யாரெல்லாம் எடுக்கலாம்?

எல்ஐசி-யின் இந்த பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் என்று வரையரை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை இல்லை. ஆக உங்களின் தேவையறிந்து அதற்கேற்ப செலுத்திக் கொள்ளலாம்.

எல்ஐசி-யின் ஜீவன் சாந்தியில் வருமானம்?

எல்ஐசி-யின் ஜீவன் சாந்தியில் வருமானம்?

நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடான 1,50,000 ரூபாய் திட்டத்தில் இணைகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு மாதத்திற்கு 1000 ரூபாயும், இதே காலாண்டுக்கு 3,000 ரூபாயும், இதே அரையாண்டுக்கு 6,000 ரூபாயும், இதே ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கும்.

ஆக நீங்கள் எவ்வளவு அதிகம் தொகையை ஆரம்பத்தில் செலுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு உங்களுக்கு வருவாய் கிடைக்கும்.

ஜீவன் சாந்தியில் கடன் சலுகை

ஜீவன் சாந்தியில் கடன் சலுகை

நீங்கள் உங்கள் பாலிசியை தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும்.

உடனடி ஆண்டுத் தொகை திட்டத்தில் இந்த வசதியானது F&J -வில் மட்டுமே கிடைக்கும். காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை திட்டத்திலும் இந்த தேர்வானது கிடைக்கும்.

வரி சலுகை உண்டா?

வரி சலுகை உண்டா?

இந்த திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழுவதுமான பாதுகாப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் இன்சூரன்ஸ் எடுப்பவர் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதந்தோறும் வருவாயினை பெறுவார்கள், ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேலை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டாலும் கூட, வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு.

 எல்ஐசி-யின் ஜீவன் உமங்

எல்ஐசி-யின் ஜீவன் உமங்

 

எல்ஐசி-யின் ஜீவன் உமங் திட்டமும் ஒரு ஓய்வூதிய திட்டமாகும். எனினும் முதிர்வு தொகையும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதோடு நாமினிக்கும் சலுகைகள் உண்டு. குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கும் , சுய தொழில் புரிபவர்களுக்கும் இந்த திட்டம் ஏதுவானதாக இருக்கும். ஏனெனில் ஓய்வூதிய காலத்தில் பென்ஷன் கிடைக்கும். ஆக இது சிறந்த ஓய்வூதிய திட்டமாகவும் கருதப்படுகிறது.

 

எல்ஐசி-யின் பிரதான் மந்திரி வய வந்தனா

எல்ஐசி-யின் பிரதான் மந்திரி வய வந்தனா

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு, 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் அதாவது மாதா மாதம், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டு அல்லது ஒவ்வொரு ஆண்டும் என நான்கு கால அளவில் ஒன்றைத் தேர்வு செய்து ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும்.

பிரதான் மந்திரி வய வந்தனா - வட்டி விகிதம்

பிரதான் மந்திரி வய வந்தனா - வட்டி விகிதம்

எல்ஐசி-காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தப் பிராதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களைச் சார்ந்து உள்ள மனைவி அல்லது கணவன் அல்லது பிறருக்கு இந்த ஓய்வூதியத்தின் கீழ் தவணை முடிய 10 ஆண்டுகள் இருக்கும் போது இறக்க நேர்ந்தால் தொடர்ந்து ஓய்வூதியம் பெற அனுமதி உண்டு.

கடன் வாங்க முடியுமா?

கடன் வாங்க முடியுமா?

இந்த திட்டத்தினை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ள முடியும். தற்போது வட்டி விகிதம் 7.66% ஆக வழங்கப்படுகிறது. இது வங்கி டெபாசிட்டுக்கு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த திட்டத்தில் இடையில் வெளியேறினால் 2% அபராதம் விதிக்கப்படுகிறது. அதுவும் தவிர்க்க முடியாத அவசர சிகிச்சைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC’s best insurance policies in 2021; benefits & features

LIC insurance plans are the most popular choice of customers in india. Let’s take a look at some of the term and pension plans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X