மும்பை: எல்ஐசி இந்தியா ஜீவன் ஆசாத் எனப்படும் புதிய திட்டத்தினை சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்துள்ளது. இது தனி நபர் மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பினை பெற முடியும்.
இது சந்தை அபாயம் இல்லாத பங்கு சந்தையுடன் இணைக்கப்படாத ஒரு திட்டமாகும்.
இந்த திட்டமானது தங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக சேமிக்க நினைப்பவருக்கு, உதவும் ஒரு திட்டமாகும். இது ஒரு வேளை பாலிசிதாரர் உயிரோடு இல்லாவிட்டாலும், குடும்பத்தினர் நிதி ரீதியாக ஆவது ஒரளவு பாதுகாப்புடன் இருக்க வழிவகுக்கும்.
உத்தரவாத தொகை
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உத்தரவாத தொகையானது 2 லட்சம் ரூபாயாக உள்ளது. இதில் அதிகபட்ச உத்தரவாத தொகையானது 5 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலிசியை 15 முதல் 20 ஆண்டு காலத்துக்கு எடுக்க முடியும். காப்பீடு காலத்தில் இருந்து 8 ஆண்டுகள் கழித்தது போக, எஞ்சிய ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால் போதுமானது.
யாரெல்லாம் இணையலாம்?
இந்த திட்டத்தில் மூன்று மாத குழந்தை முதல் 50 வயது பெரியவர் வரையிலானவர்கள் வரையில் சேர்ந்து கொள்ளலாம். இந்த பாலிசியின் குறைந்தபட்ச முதிர்வு வயது 18 ஆகும். இதே அதிகபட்ச வயது 70 வயதாகும்.
இந்த பாலிசியில் இறப்பு பலனும் உண்டு. ஆக பாலிசி காலத்தில் பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டாலும், இதன் மூலம் குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக ஆதரவு கிடைக்கும். இந்த பாலிசிக்கு எதிராக கடனும் பெற முடியும்.
பிரீமியம் எப்படி?
இந்த பாலிசியிலும் மற்ற பாலிசிகளில் பிரீமியம் செலுத்துவதை போல மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ செலுத்திக் கொள்ளலாம்.
இந்த பாலிசியில் இறப்பு பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் கிடைக்கும் இறப்பு பலன் பாலிசிதாரரின் பிரீமியத்தில் 7 மடங்கு கிடைக்கலாம் அல்லது அதிகபட்ச உத்தரவாத தொகையாகவோ இருக்கலாம். எப்படியிருப்பினும் நீங்கள் செலுத்தும் பிரீமியத்தில் 105% குறைவாக இருக்காது. இதில் குழந்தைகளின் பெயரில் பாலிசி இருக்கும்போது இறப்பு பலனில் வரி வட்டி உள்ளிட்ட அம்சங்கள் இருக்காது.
ரிஸ்க் கவரேஜ்
இந்த திட்டத்தில் ரிஸ்க் கவரேஜ் விகிதமானது 8 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் எடுக்கும்போது 8 வயதை எட்டும்போதோ அல்லது 2 ஆண்டுகள் கழித்தோ கவரேஜ் ஆரம்பமாகும். இதே 8 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனில் வாங்கிய நாளில் இருந்தே கவரேஜ் கிடைக்கும்.
எவ்வளவு கிடைக்கும்
இந்த பாலிசியினை இரண்டு ஆண்டுகள் கழித்து சரண்டர் செய்து கொள்ளலாம். எனினும் இதில் 2 வருட முழு பிரீமியம் செலுத்தியிருக்க வேண்டும். பாலிசிதாரர் முதல் பிரீமியமாக பெற 25,120 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதே இரண்டாவது ஆண்டில் இருந்து 24,578 ரூபாய் பிரீமியமாக 12 வதுஆண்டு வரை செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் முதிர்வு கலத்தில் 5 லட்சம் ரூபாயும், மொத்த பிரீமியமும் 2,95,478 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.
மொத்தத்தில் இந்த திட்டத்தினை சேமிப்பு மற்றும் முதலீடு என இரண்டையும் ஒருசேர செய்ய இந்த திட்டம் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications