நம் நாட்டில் அரசாங்க உத்யோகம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை சில கோடிகளில்தான் இருக்கும். அதேசமயம், மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் தனியார் துறையில்தான் வேலை பார்ப்பவர்கள்தான். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பென்சன் ஒன்று இருப்பதால் அவர்களுக்கு ஓய்வூதிய காலம் குறித்த கவலையோ அல்லது அழுத்தமோ பெரிய அளவில் இருக்காது.
ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு வருமானத்துக்கு என்ன செய்வது என்ற கவலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஓய்வூதிய காலம் குறித்த அழுத்தத்தில் இருக்கும் சாமானிய மக்களின் கவலைகளை போக்கும் வகையில் எல்ஐசி நிறுவனம் புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமும், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பிப்ரவரி 18ம் தேதியன்று (நேற்று) ஒ்ற்றை பிரீமியம் ஸ்மாா்ட் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒற்றை பிரீமிய காப்பீடு என்பது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.
அதாவது, மொத்த பிரீமிய தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தி, பாலிசி முதிர்வு வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பென்சன் திட்டம், பங்கேற்காத மற்றும் இணைக்கபடாத, தனிநபர்/குழு, சேமிப்பு, உடனடி வருடாந்திர வருமானம் திட்டம் மற்றும் உள்நாட்டு சந்தைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் இந்த ஸ்மார்ட் ஓய்வூதிய திட்ட பாலிசியை குறைந்தபட்சம் ரூ.1,00,000 செலுத்தி வாங்கலாம். அதிக தொகைக்கு வாங்கினால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், வருடாந்திர கொடுப்பனவு முறைகள், ஆண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திரம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது முதல் 100 வயது வரையிலான நபர்கள் முதலீடு செய்யலாம். சந்தாதாரர்கள் (பென்சன் பாலிசி எடுத்தவர்கள்) 5 ஆண்டுகளுக்கு பிறகு, முதலீடு செய்த தொகையில் 60 சதவீதம் வரை திரும்ப எடுக்கலாம். பாலிசி எடுத்த 3 மாதங்களுக்கு பிறகு சந்தாதாரர்கள் அதன் வாயிலாக கடன் பெறும் வசதியும் உள்ளது.
ஸ்மார்ட் பென்சன் திட்ட சந்தாதாரர் மரணத்திற்கு பிறகு, பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு மொத்த தொகையும் வழங்கப்படும். மேலும் இதனை மற்றொரு வருடாந்திரமாக மாற்றப்படலாம் அல்லது 5,10 அல்லது 15 ஆண்டுகளில் தவணைகளில் பெறும் வசதியும் உள்ளது. இந்த பென்சன் திட்டம் பங்கேற்காத மற்றும் இணைக்கப்படாத ஒன்று என்பதால், பாலிசி போனஸ் அல்லது உபரியில் பங்கு பெற முடியாது, அதேபோல் நிறுவனத்தின் இழப்புகளுக்கும் உங்களுக்கும் எந்ததொடர்பும் கிடையாது.
இந்த திட்டத்தின்கீழ், இறப்பு அல்லது உயிர்வாழ்வின்போது செலுத்த வேண்டிய நன்மைகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, அனுபவத்தை பொருட்படுத்தாமல் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதொகை விருப்பத்தின்படி) நிலையானதாக இருக்கும்.
ஸ்மார்ட் பென்சன் பிளான் தனிநபர் மற்றும் குழு என இரண்டு விதமாக உள்ளது. ஒரு கூட்டு ஆயுள் காப்பீடு கொள்கை திட்டத்தின்கீழ், இரண்டு நபர்களை உள்ளடக்கியது. அதேநேரத்தில் ஒரு தனிப்பட்ட பாலிசி ஒரு நபரை மட்டுமே உள்ளடக்கியது.
கூட்டு ஆயுள் வருடாந்திர தொகை பாலிசியை ஒரு குடும்பத்தின் இரண்டு வாரிசுகள் அல்லது உடன்பிறந்தவர்கள் அல்லது மாமியார் இடையே எடுத்துக்கொள்ளலாம் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை முகவர்கள் மற்றும் பிஓஎஸ்பி-எல்ஐ, பொது சேவை மையங்கள், எல்ஐசி இணையதளம் போன்ற பிற வழிமுறைகளிலும் இந்த ஸ்மார்ட் பென்ஷன் திட்ட பாலிசியை வாங்கலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications