எல்ஐசி-யின் சூப்பரான டெக் டெர்ம் பிளான்.. யாருக்கு பொருந்தும்.. எவ்வளவு பிரீமியம்.. நன்மைகள் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதர்களின் வாழ்க்கையை வெறுமனே யாரும் ,மதிப்பிட முடியாது? அதிலும் வருமான இழப்பு? உயிர் சேதம் என பலவற்றையும், இந்த கொரோனா காலத்திலேயே நாம் பார்த்துள்ளோம்.

ஆக இப்படியாக நெருக்கடியான காலகட்டங்களில் உதவுவது இன்சூரன்ஸ் பாலிசிகள் தான். இவை விபத்து மரணம், இயலாமை, ஓய்வு என பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக எந்தவொரு நெருக்கடியான தற்செயலான நேரத்திலும் நிதி பாதுகாப்பு அளிக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எல்ஐசியின் டெக் டெர்ம் பாலிசியினை தான். அதெல்லாம் சரி முதலில் டெர்ம் பிளான் என்றால் என்ன? இந்த பாலிசியில் எப்படி இணையலாம்? மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

மார்ச் 31 தான் கடைசி தேதி.. கட்டாயம் இதை செய்யுங்கள்.. இல்லாட்டி பிரச்சனை தான்..!மார்ச் 31 தான் கடைசி தேதி.. கட்டாயம் இதை செய்யுங்கள்.. இல்லாட்டி பிரச்சனை தான்..!

டெர்ம் திட்டங்கள் என்றால் என்ன?

டெர்ம் திட்டங்கள் என்றால் என்ன?

பொதுவாக டெர்ம் திட்டங்கள் என்பது குறைந்த பிரீமியத்தில் அதிக பயன் அளிக்கும் திட்டங்களாகும். இது பாலிசிதாரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே கவரேஜ் கிடைக்கும். பாலிசிதாரர்கள் தங்களது வருமானத்தில் 15% வருவாயினை டெர்ம் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

எல்ஐசி டெக் டர்ம் பிளான்

எல்ஐசி டெக் டர்ம் பிளான்

எல்ஐசி டெக் டர்ம் பிளான் (Tech Term plan) ஒரு pure risk premium plan ஆகும். LIC -ன் இந்த ஆன்லைன் டெர்ம் பாலிசி, ஆஃப்லைன் பாலிசிகளை விட மலிவானது. பாலிசி முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னர் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், பாலிசியின் தொகை குடும்பம்பத்திற்கு கிடைக்கிறது. பாலிசியின் கொள்கை காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையாகும்.

வயது தகுதி

வயது தகுதி

18 வயது முதல் 65 வயது வரையிலான நபர்கள் இந்த திட்டத்தை எடுக்கலாம். LIC -ன் இந்த டெர்ம் பிளானில், பாலிசி கவரேஜிற்கான அதிகபட்ச வயது வரம்பு 80 ஆக வைக்கப்பட்டுள்ளது. நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அமெக்ஸ் கார்டு, UPI, IMPS மற்றும் இ-வாலட் மூலம் புதுப்பித்தல் (renewal) மற்றும் பிரீமியம் செலுத்தலாம்.

எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்?

எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்?

எல்ஐசியின் இந்த டெக் டர்ம் பிளானில் குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் முதல் கவரேஜ் கிடைக்கும். அதிகபட்ச கவரேஜ் என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இது உங்களது வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இந்த டெக் டெர்ம் பிளானில் பிரீமியத்தினை ஆண்டுக்கொரு முறையோ அல்லது அரையாண்டுக்கு ஒரு முறையே அல்லது வருடத்தில் ஒரு முறையாகவோ செலுத்திக் கொள்ளலாம்.

எவ்வளவு பிரீமியம்?

எவ்வளவு பிரீமியம்?

இது புகைப்பிடிப்பவர் அல்லது பிகைப்பிடிக்காதவர்களை பொறுத்து பிரீமியம் மாறுபடும். இது விபத்து காப்பீட்டுடன் ஒரு ரைடர் பாலிசியாகவும் உள்ளது. 30 வயதுடைய ஒருவர் இந்த திட்டத்தில் இணைகிறார் எனில், 50 லட்சம் கவரேஜ் - க்கு 9,912 ரூபாய் ஜிஎஸ்டியுடன் சேர்த்து பிரீமியம் இருக்கலாம். இதே நபர் 1 கோடி ரூபாய்க்கு கவரேஜ் வேண்டுமெனில் 17,445 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC tech term plan: check features, options and premium details

Insurance latest updates.. LIC tech term plan: check features, options and premium details
Story first published: Sunday, March 21, 2021, 19:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X