எத்தனை முறை, எத்தனை விதமாகச் சொன்னாலும் நம்மாட்களுக்கு ஆயுள் காப்பீடு என்பது முதலீடல்ல, அது ஓர் அத்தியாவசியச் செலவு என்பது புரியமாட்டேங்குது.
எப்படியாவது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று விடவேண்டுமென்ற நினைப்பே தேவையற்ற பாலிசிகளில் பணத்தை இழக்க வைக்கிறது.
ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடுன்னா திரும்ப எவ்வளவு கிடைக்கும் என்று கேட்போர், அவங்களோட காருக்கு காப்பீடுன்னா எதுவும் கேக்காம முழு காப்பீடு வாங்கத் தயாரா இருக்காங்க. அவங்க குடும்ப பாதுகாப்பின் மதிப்பு காரின் மதிப்பை விடக்கம்மின்னு நினைக்கறாங்க போல.
கார் இன்சூரன்ஸ்
பத்து லட்ச ரூபாய் கார் விபத்தில் உருக்குலைந்து போனா ஒரு லட்ச ரூபா கிடைக்கும். பாலிசி காலத்தில் கார் விபத்தில் சிக்கலேன்னா கட்டுன பணமும் 3% வட்டியும் கிடைக்கும்னு சொன்னா அப்பாலிசி வாங்குவீங்களா? பத்து லட்ச ரூபா காருக்கு எப்படி 1 லட்சம் காப்பீடு போதும்னு கேப்பீங்க இல்ல? அதே கேள்வியை ஏன் ஆயுள் காப்பீடு எடுக்கும் போது கேக்க மாட்டேங்கறீங்க?
80 வயது வரை காப்பீடு
கார் இருக்கும் வரை தானே காப்பீடு வச்சிருப்பீங்க? அடுத்த ஐம்பது வருசம் காருக்கு காப்பீடுன்னு சொன்னா, அவ்வளவு நாள் கார் வச்சிருக்க மாட்டேன்னு சொல்வீங்கதானே? அப்புறம் ஏன் 80 வயது வரை ஆயுள் காப்பீடு எடுக்கச் சொல்லும் போது 60 வயதுக்கு மேல் வருமானம் ஈட்டமாட்டேன் எனக்கு எதுக்கு 80 வயது வரை காப்பீடுன்னு கேக்க மாட்டேங்கறீங்க?
ப்ரீமியம் தொகை
காருக்கு காப்பீடு எடுத்துட்டு விபத்து நிகழலேன்னா ப்ரீமியம் திரும்பக் கிடைக்குமான்னு எதிர்பார்க்காத நீங்க அதே அளவு கோலை ஆயுள் காப்பீட்டுக்கு ஏன் உபயோகிக்க மாட்டேங்கறீங்க?
ஆயுள் காப்பீடு முதலீடல்ல
ஆயுள் காப்பீடு முதலீடல்ல, அது உங்களை ஒரு போதும் பணக்காரனாக்காது, அது அதன் வேலையுமல்ல. நல்ல ஆயுள் காப்பீடு ஒருவேளை நீங்கள் இல்லாமல் போனால் உங்க குடும்பம் நடுத் தெருவில் நிற்காமல் காப்பாத்தும். இதை புரிந்துக்கொண்டாலே போதும் என பேஸ்புக்கில் பாஸ்டன் ஸ்ரீராம் என்பவர் கூறியுள்ளார்.
இளம் தலைமுறையினர்
குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் ஆயுள் காப்பிட்டின் முக்கியதுவத்தை புரிந்துக்கொண்டு குடும்பத்தை பாதுகாக்கவும், வருமான வரியை சேமிக்கவும் வேலைக்கு சேர்ந்த உடனே தேவைகளை கணக்கிட்டு இதில் முதலீடு செய்வது நல்லது. இதேபோல் 35, 40 வயதுக்கு மேல் ஆயுள் காப்பீடு எடுத்தால்.
Disclaimer
Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications