இப்போதெல்லாம் மருத்துவ செலவுகள் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு உயர்ந்துவிட்டன. குறிப்பாக திடீரென ஏற்படும் எதிர்பாராத உடல்நல பிரச்னைகளுக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம்.
இத்தகைய நேரத்தில் நமக்கு கை கொடுப்பவை தான் ஹெல்த் இன்சூரன்ஸ் எனப்படும் மருத்துவ காப்பீடுகள். எனவே அனைவரும் கண்டிப்பாக மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏன் மருத்துவ காப்பீடு அவசியம்: யாருக்கு எப்போது என்ன மாதிரியான உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை உறுதியாக கூற முடியாத காலம் இது. சில நேரத்தில் சாதாரண உடல் நல பிரச்சனை என நினைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனால் அது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்து விடும் நிலைமை பலருக்கு ஏற்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சை என்றாலே சில லட்சங்கள் செலவாகும் என மருத்துவமனை கூறுகிறது. அத்தகைய சூழலில் மருத்துவ காப்பீடு இருந்தால் உடனே சிகிச்சையை மேற்கொள்ளலாம். இல்லையெனில், பணத்தை ஏற்பாடு செய்ய அலைய வேண்டும். எனவே தான் மருத்துவ காப்பீடு என்பது அத்தியாவசியமாகிவிட்டது.
இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ காப்பீடு என்பது தேவை என்பதை தாண்டு அத்தியாவசியாமாக மாற்றியுள்ளது. இதனால் மருத்துவ காப்பீடு என்பது ஒவ்வொரு வருடமும் மக்களின் முக்கிய செலவுகளில் ஒன்றாக உள்ளது.
மருத்துவ காப்பீடு ப்ரீமியத்தை எப்படி குறைக்கலாம்?: மருத்துவ காப்பீடு ப்ரீமியம் என்பது வயது, ஏற்கனவே உடலில் உள்ள பிரச்னைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நமது அன்றாட பழக்க வழக்கங்கள் நேரடியாகவே மருத்துவ காப்பீடு ப்ரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினால் உங்களது உடல்நிலைக்கும் நல்லது, மருத்துவ காப்பீடு ப்ரீமியமும் குறையும்.
புகைப்பிடித்தல்: புகைபிடிக்கும் பழக்கம் பின்னாளில் பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மருத்துவ காப்பீடு எடுக்கும் போதே உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா என்பதை கேட்டு தான் பாலிசிகளே பரிந்துரைக்கப்படும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
மது அருந்துதல்: அதிகளவில் மது அருந்தும் பழக்கம் பின்னாளில் கல்லீரல், இதயம் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உங்களது மருத்துவ காப்பீட்டு ப்ரீமியமும் அதிகரிக்கும். எனவே மது அருந்தும் பழக்கத்தை கைவிடுவது உங்களுக்கும் நல்லது, மருத்துவ காப்பீடு ப்ரீமியத்தையும் குறைக்கிறது.
உடல் பருமன்: உடல் பருமன் பின்னாட்களில் நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவினை எடுத்து கொள்வது, உடற்பயிற்சி செய்வது ஆகியவை உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ப்ரீமியம் தொகையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது: தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது, பெருமளவிக் உடலை இயக்காமல் செய்யும் பணிகள் எல்லாம் பின்னாளில் பல உடல்நல பிரச்னைகளை வரவழைக்கும். அதை தவிர்க்கலாம், அல்லது அத்தகைய பணி சூழல்களிலும் எப்படி ஆக்டிவாக இருப்பது என்பதை அறிந்து செயல்படலாம்.
தூக்கமின்மை: இரவு நேரங்களில் விழித்திருப்பது , ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மணி நேரங்கள் தூங்காமல் இருப்பது ஒட்டுமொத்தமாகவே உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
மன அழுத்தம்: பணி சார்ந்த அல்லது வாழ்க்கை சார்ந்த மன அழுத்தங்களை முறையாக கையாள வேண்டும். இல்லையெனில் நாளடைவில் அவை நாம் எதிர்பாராத உடல்நல பிரச்னைகளை கொண்டு வந்துவிடும். எனவே மன அழுத்தம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதை கற்றுக் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications