இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளின் அவசியத்தினை பற்றி பலரும் உணர்ந்திருப்பர். இது பலருக்கும் நினைக்ககூட முடியாத ஒன்றாக உள்ளது.
அப்படியிருந்தாலும் குழந்தைகளின் வருங்கால நலன் கருதியும், மற்ற செலவினங்களை குறைத்து முதலீடு செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
அப்படி முதலீடு செய்யும் போது, முதலில் நாம் நினைப்பது முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது. குறைந்த அளவிலான லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை, ஆனால் முதலீட்டிற்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்பது தான். ஆக அப்படியானவர்களுக்கு எந்த திட்டம் பொறுந்தும். எதில் முதலீடு செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம்.
சிறந்த முதலீடு எது?
ஆக பாதுகாப்பாகவும், கணிசமான லாபமும் வேண்டுமெனில், முதலில் தேர்தெடுப்பது பெரும்பாலும் வங்கி வைப்பு நிதிகளைத் தான். ஆனால் அங்கோ இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் குறைவு. ஆனால் இப்படி நினைப்பவர்களுக்கு லிக்விட் ஃபண்டுகள் சிறந்த ஒரு முதலீடாக கூறலாம். ஏனெனில் இதில் குறுகிய கால வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும்போது நல்ல லாபம் கிடைக்கும். அதோடு எந்த சமயத்திலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
எதில் முதலீடு செய்யப்படுகிறது
லிக்விட் ஃபண்டுகள் பண்டுகளில் குறுகிய நாட்களில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் சுமார் 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். ஏனெனில் இந்த லிக்விட் ஃபண்டுகள் என்பது வங்கி நிலையான வைப்பு நிதி மற்றும், கடன் பத்திரங்கள், 90 நாட்கள் முதிர்ச்சியுடன் கூடிய பிற கடன் பத்திரங்கள் போன்ற நிதிக் அம்சங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆக உங்களுக்கு கணிசமான வருவாயும் கிடைக்கும்.
இதன் சிறப்பம்சம்
லிக்விட் பண்டுகளில் நெட் அசெட் வேல்யூ 365 நாட்களுக்கும் கணக்கிடப்படுகிறது. இதே மற்ற டெப்ட் பண்டுகள் வணிக நாட்களுக்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஆனால் லிக்விட் பண்டுகளுக்கு எந்தவொரு பூட்டுதல் காலத்தில் கூட எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஒரு வேளை உங்களது பணத்தினை நீங்கள் திரும்ப பெற வேண்டும் எனில், 24 மணி நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் இது ஒரு சிறப்பம்சம் என்றே கூறலாம்.
சின்ன பிரச்சனை இல்லை
எனினும் இதில் கவனிக்கதக்க ஒரு பிரச்சனையும் உண்டு. அது இந்த ஃபண்டுகள் குறுகிய காலத்தில் முதலீடு செய்யப்படுவதால், இதற்கு டிவிடெண்ட் விநியோக வரியாக 25 சதவீதம் விதிக்கப்படுகிறது. இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் பணத்தினை 1 வருடத்திற்கு மேல் முதலீடு செய்தால் 10 சதவீதம், நீண்டகால ஆதாய வரி 10 சதவீதம் செலுத்த வேண்டியிருக்கும்.
சில ஃபண்டுகள் இதோ?
ஆக மொத்தத்தில் குறுகிய கால நோக்கில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த ஃபண்டு உகந்த ஒரு முதலீடாகும்.
Top 5 liquid funds in india
- Nippon india liquid fund
- SBI liquid fund
- HDFC liquid fund
- Invesco india liquid fund
- Axis liquid fund
- ICICI prudential liquid fund
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications