அதிக வட்டி தரும் டாப் வங்கிகள்.. வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம்..!
இந்தியாவில் பொதுவாகவே வங்கிகள் சார்ந்த முதலீடுகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. இது வட்டி குறைவு என்றாலும், மிக பாதுகாப்பான, முதலீட்டுக்கு பங்கமில்லாத முதலீடுகளாக பார்க்கப்படுகிறது.
அதிலும் இந்த கொரோனா காலத்தில் அரசு பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாகவும், மக்களின் கையில் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் ரெப்போ விகிதத்தினை குறைத்தது. இந்த நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம் வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான விகிதமும் குறைவாகவே உள்ளது.
அப்படி இருந்தாலும், சில வங்கிகள் நிதி நிறுவனங்கள் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி கொடுக்கின்றன. அதிலும் டெபாசிட் காலத்தினை பொறுத்து எந்த வங்கியில் அதிக வட்டி விகிதம்? எது சிறந்தது? என்ன டெபாசிட் காலம் என்பதை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
1 வருட முதிர்வு காலத்தில் அதிக வட்டி தரும் வங்கிகள்
- ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 6.75%
- தேனா வங்கி - 6.75%
- உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 6.50%
- இந்தஸிந்த் வங்கி - 6.50%
- ஆர்பிஎல் வங்கி - 6.50%
2 வருட முதிர்வு காலத்தில் அதிக வட்டி தரும் வங்கிகள்
- ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 7.00%
- யெஸ் வங்கி - 6.50%
- உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 6.50%
- இந்தஸிந்த் வங்கி - 6.50%
- ஆர்பிஎல் வங்கி - 6.50%
3 வருட முதிர்வு காலத்தில் அதிக வட்டி தரும் வங்கிகள்
- ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 7.00%
- எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 6.65%
- யெஸ் வங்கி - 6.50%
- உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 6.05%
- கரூர் வைஸ்யா வங்கி - 5.65%
5 வருட முதிர்வு காலத்தில் அதிக வட்டி தரும் வங்கிகள்
- ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 7.00%
- இந்தியா போஸ்ட் ஆபிஸ் - 6.70%
- எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 6.40%
- தேனா வங்கி - 6.30%
- உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 5.80%


Click it and Unblock the Notifications