இவங்க எல்லாம் 3 மாத EMI தள்ளி வெச்சிருக்காங்க! நீங்க இந்த வங்கி வாடிக்கையாளரா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 3 மாத இஎம்ஐ (EMI) ஒத்தி வைக்க அனுமதி கொடுத்தது.

இந்த அனுமதியை எஸ்பிஐ போன்ற வங்கிகள் முதலில் அமல்படுத்தியது.

அதற்குப் பின் ஒவ்வொரு வங்கியாக தற்போது அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. அந்த வங்கிகளின் பட்டியலைத் தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

 வருமான வரியில் 5 புதிய மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் அமல்..! வருமான வரியில் 5 புதிய மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் அமல்..!

பஞ்சாப் நேஷனல் பேங்க்

பஞ்சாப் நேஷனல் பேங்க்

பிஎன்பி தன் வாடிக்கையாளர்களுக்குச் சில உதவித் திட்டங்களை வழங்குகிறது. மார்ச் 01, 2020 முதல் மே 31, 2020 வரையான அனைத்து டேர்ம் லோன் தவணைகள் மற்றும் கேஷ் க்ரெடிட் வட்டிகளை தள்ளி வைத்திருப்பதாக, தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்கள். மேற்கொண்டு விவரங்களுக்கு வங்கிக் கிளையை தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள்.

ட்விட்டைக் காண:

 

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், மார்ச் 01, 2020 முதல் மே 31, 2020 வரையான அனைத்து டேர்ம் கடன்கள் & வொர்க்கிங் கேப்பிட்டல் கடன் தவணைகள் மற்றும் வட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்.

ட்விட்டைக் காண:

 

கனரா பேங்க்

கனரா பேங்க்

கோவிட் 19 பாதிப்பால் ஆர்பிஐ அறிவித்து இருக்கும் பேக்கேஜ்களால், கடன் வாங்கி இருப்பவர்கள், 01-03-2020 முதல் 31-05-2020 வரையான காலத்துக்கு டேர்ம் லோன் இஎம்ஐ (EMI) மற்றும் தவணைகளை ஒத்திப் போட தகுதி உள்ளவர்களாகிறார்கள். எனவே கடனுக்கான தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் காலம் இதற்குத் தகுந்தாற் போல நீட்டிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறது கனரா வங்கி.

ட்விட்டைக் காண:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

சமீபத்தில் ஆர்பிஐ அறிவித்து இருக்கும் கோவிட் 19 ரெகுலேட்டரி பேக்கேஜின் அடிப்படையில், சில உதவி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். 3 மாதத்துக்கு டேர்ம் லோன்களுக்கான தவணைகள் ஒத்தி வைக்க அனுமதிக்கிறோம்.

1. அசல் மற்றும் அல்லது வட்டி
2. புல்லட் ரீபேமெண்ட்கள்
3. இ எம் ஐ
4. க்ரெடிட் கார்ட் பாக்கித்தொகை (01-03-2020 - 31-05-2020) எல்லாம் ஒத்தி வைக்கப்படுகிறதாம்.

இந்த இஎம்ஐ ஒத்திவைப்பு காலத்திலும் வட்டி கணக்கிடப்படுமாம். மேற்கொண்டு விவரங்களுக்கு எங்கள் வலைதளத்தைக் காணவும் எனச் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா.

ட்விட்களைக் காண க்ளிக் செய்யவும்:

ட்விட் 1:

ட்விட் 2:

ட்விட் 3:

 

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா, கடந்த 01.03.2020 முதல் 31.05.2020 வரையான அனைத்து கடன் தவணைகளும் 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கிறது. இது அனைத்து ரக டேர்ம் கடன்கள் (கார்ப்பரேட், எம் எஸ் எம் இ, விவசாயம், சில்லறைக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன்...) எல்லாவற்றுக்கும் பொருந்தும் என தன் ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா.

ட்விட்டைக் காண:

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

List of banks which deferred 3 month emi for loans

List of public sector banks which deferred 3 month emi installment for their term loans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X