சில வங்கிகள் ஆதார் அட்டையுடன் உடனடி தனிநபர் கடன் வசதியை வழங்குகின்றன. இவற்றில் அனைத்து கடன் செயல்முறைகளும் முற்றிலும் டிஜிட்டல் செயல்முறைகளாக உள்ளன. இவற்றில் மறைக்கப்பட்ட கட்டணங்கள் எதுவும் இல்லை.தனிநபர் கடன் என்பது வங்கிகள் எந்த பிணையமும் இல்லாமல் வழங்கும் கடனாகும். பணத் தேவை அவசரமாக இருக்கும்போது பெரும்பாலான மக்கள் இதைத் தேர்வு செய்கிறார்கள். திருமணச் செலவுகள், வீட்டைப் புதுப்பித்தல், கல்வி, மருத்துவ அவசரச் செலவுகள் போன்றவற்றுக்கு இந்தக் கடன் மூலம் பணம் திரட்ட முடியும்.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, வங்கிகள் வாடிக்கையாளரிடம் அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் KYCக்கான வருமானச் சான்று தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்கின்றன. இவற்றில் ஆதார் அடையாளச் சான்று மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து கடன்களை வழங்குகின்றன. இது தனிப்பட்ட அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. பெயர், பிறந்த தேதி, புகைப்படம், முகவரி மற்றும் பயோமெட்ரிக் தரவு ஆகியவை வங்கிகளால் பதிவுகளில் பதிவேற்றப்படுகின்றன. ஆதார் அட்டையின் அடிப்படையில் சம்பளம் பெறும் தனிநபர்கள் எளிதாக கடன் பெற முடியும்.

சில வங்கிகள் ஆதார் அங்கீகாரத்துடன் உடனடி தனிநபர் கடனை வழங்குகின்றன. வங்கிகள் எவை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, இண்டஸ் வங்கி ஆதார் அட்டையின் அடிப்படையில் உடனடி பர்சனல் லோனை வழங்குகிறது. இது முற்றிலும் டிஜிட்டல் செயல்முறையாக உள்ளது. செயல்முறைகள் அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படுகிறது. விரைவான சரிபார்ப்புக்கு ஆதார் எண்ணை அளித்து, வங்கி கேட்கும் நிதி விவரங்களை அளித்தால், கடன் உடனடியாக அங்கீகரிக்கப்படும். சில நிமிடங்களில் உங்கள் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படும்.
ஆதாருடன் உடனடி தனிநபர் கடனைப் பெறுவதும் சில நன்மைகளை தருகிறது. அவற்றில் வட்டி விகிதங்களும் ஒப்பீட்டளவில் குறைவுதான். இதன்மூலம், ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் பெறலாம். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் உங்கள் வசதியைப் பொறுத்து ஒரு வருடம் முதல் 4 ஆண்டுகள் வரை தேர்ந்தெடுக்கப்படலாம். எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல் உங்களுக்குத் தேவையான பணத்தைப் பெறமுடியும்.
1.அதற்கு முதலில் கடனுக்காக, நீங்கள் விரும்பும் வங்கியின் இணையதளத்தில் தனிநபர் கடன் பிரிவுக்குச் செல்ல வேண்டும். அல்லது மொபைல் செயலியை டவுன்லோட் செய்து தனிநபர் கடன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.முதலில் நீங்கள் பான் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும்.
2.உங்கள் தொலைபேசி எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
3.விண்ணப்பப் படிவத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தனிப்பட்ட, தொழில்முறை மற்றும் நிதி விவரங்களை வழங்கவும்.
4.அதன் பிறகு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று தொடரவும்.
5.இந்த விவரங்களை உள்ளிட்ட பிறகு, நீங்கள் பெறும் கடனின் அளவு மற்றும் உங்கள் தகுதியைப் பொறுத்து வட்டி விகிதம் காட்டப்படும். நீங்கள் விரும்பும் சலுகையை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் கடன் மதிப்பெண், வருமானம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் வங்கிகள் உங்கள் கடன் மற்றும் வட்டி விகிதத்தை தீர்மானிக்கின்றன.
6.சலுகையைத் தேர்ந்தெடுத்த பிறகு மற்ற விவரங்களையும் வங்கிகள் கேட்கின்றன. குறிப்பாக ஆதார் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். பான் கார்டுடன் வருமானம் தொடர்பான ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வங்கி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, வங்கிகள் அதைச் சரிபார்த்து, உங்கள் வங்கிக் கணக்கில் கடன் தொகையை டெபாசிட் செய்யும்.
குறிப்பாக, தனி நபர் கடன் பெற விரும்புவோர்கள் ஆர்பிஐ அனுமதி பெற்ற வங்கிகள் மூலம் மட்டும் கடன்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம் கடன் வாங்கும்போது அவை ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளதா என்பதை விரிவாக தெரிந்துகொண்டு பின்னர் வாங்க வேண்டும். அதேபோல், மொபைல் ஆப்ஸ்களில் ஏராளமான உடனடி கடன் செயலிகள் உள்ளன. அவற்றில் போலியும் உள்ளது. போலிகள் உங்களுக்கு கடன் கொடுப்பது போல் கொடுத்து வாழ்க்கையை அழித்துவிடும் ஆபத்துகள் உள்ளன. எனவே தனி நபர் கடன் வாங்குவோர்கள் சரியான வங்கியை தேர்ந்தெடுத்து வாங்குதல் அவசியம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications