தற்போது முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற குழப்பம் வந்துவிட்டது. இந்தியாவில் வங்கிகளை விட அஞ்சல் அலுவலகங்களில் கூடுதல் வட்டியுடன் கூடிய சிறந்த முதலீடு திட்டங்கள் கிடைக்கின்றன. அவை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்..
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு(Post office savings account): ரூ.500 டெபாசிட் செய்து அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆண்டுதோறும் இந்த கணக்கில் உள்ள தொகைக்கு 4 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit): குறைந்தபட்சம் ரூ, 1000 அல்லது ரூ.100இன் பெருக்கல் தொகையில் கணக்கு தொடங்கி வரவு வைக்கலாம். இதில் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பே இல்லை. டெபாசிட்டின் கால அளவை பொறுத்து வட்டி தீர்மானிக்கப்படுகிறது. ஒராண்டு டெபாசிட்டிற்கு 6.9% வரையும், 2 ஆண்டுகளுக்கு 7% வரையும், 3 ஆண்டுகளுக்கு 7.1% வரையும் , 5 ஆண்டுகளுக்கு 7.5% வரையும் வட்டி வழங்கப்படுகிறது.
5 ஆண்டுகள் ஆர்.டி. திட்டம் (5-year recurring deposit scheme): அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் இந்த ஆர்.டி. திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100இல் இருந்து சேமிக்க தொடங்கலாம். இந்த முதலீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior citizen savings scheme): 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சேமிப்பு திட்டம் இது. குறைந்தபட்சம் ரூ.1,000இல் தொடங்கி ரூ.30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இதன் லாக் இன் காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 % வட்டி கிடைக்கும்.
மாதாந்திர வருவாய் கணக்கு திட்டம் (Monthly income account): அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் மற்றொரு சிறு சேமிப்பு திட்டம் இது.குறைந்தபட்சம் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் சேமிக்கலாம், இதில் 7.4% வட்டி கிடைக்கிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC (VIII) issue): குறைந்தபட்சம் ரூ.1,000முதலீடு செய்து இந்த திட்டத்தில் இணையலாம். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு உச்சவரம்பு இல்லை. ஆண்டுதோறும் கூட்டு வட்டி கணக்கில் 7.7% வட்டி கிடைக்கிறது.
பிபிஎஃப் (PPF): குறைந்தது ரூ.500 முதலே இதில் முதலீடு செய்யலாம். ஆனால் ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதில் கூட்டு வட்டி முறையில் ஆண்டுக்கு 7.1 % வட்டி கிடைக்கிறது.
கிஷான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra): ஆண்டுதோறும் கூட்டு வட்டி முறையில் 7.5% வட்டி கிடைக்கிறது. இதில் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. நீங்கள் முதலீடு செய்யும் பணம் 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications