வீடு வாங்க நினைப்போருக்கு குட் நியூஸ்.. ஆல் டைம் லோ வட்டி.. எந்த வங்கியில் குறைவான வட்டி..!

சொந்த வீடு என்பது இன்று பலருக்கும் பெரும் கனவாகவே இருக்கும். குறிப்பாக வாடகை வீட்டில் இருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம். இது லட்சியமாகவே இருக்கும்.

இப்படி பலரின் கனவுகளையும், லட்சியத்தையும் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருப்பது வீட்டுக் கடன் தான்.

அப்படிப்பட்ட வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமானது தற்போது, ஆல் டைம் லோ விகிதத்தில் உள்ளது என்பது மிக நல்ல விஷயம் தானே.

இது சரியான நேரம்

இது சரியான நேரம்

நாட்டில் கொரோனாவின் கோரப்பிடிக்கும் மத்தியில் இப்படி சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன. இது பலருக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்க சரியான நேரமாக உள்ளது. ஏனெனில் இதன் மூலம் உங்களுக்கு வட்டி விகிதம் குறையும். மாத மாதம் செலுத்தும் இ எம் ஐ தொகையும் குறையும். மொத்தத்தில் வீடு கட்ட, வாங்க நினைப்பவர்களுக்கு சரியான காலமே.

ரெப்போ விகிதம் மாற்றமில்லை

ரெப்போ விகிதம் மாற்றமில்லை

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் ரியல் எஸ்டேட் துறையானது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியும் சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில், ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தினை மாற்றம் செய்யவில்லை. இதனால் பல வங்கிகளிலும் வட்டி விகிதம் என்பது மிக குறைவாகவே உள்ளது.

இதே நிலை தொடரலாம்

இதே நிலை தொடரலாம்

ஆக மீடியம் டெர்மில் வீடு வாங்குவோருக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். குறைவான வட்டி விகிதம் என்பது ரியல் எஸ்டேட் துறையினை ஊக்குவிக்கலாம். தற்போதைய நிலையில் ரெப்போ விகிதமானது தொடர்ந்து 4% ஆகவே உள்ளது. இதே ரிவர்ஸ் ரெப்போ விகிதமானது 3.35% ஆகவே உள்ளது. இந்த விகிதம் என்பது இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடக் மகேந்திரா வங்கியில் என்ன நிலவரம்?

கோடக் மகேந்திரா வங்கியில் என்ன நிலவரம்?

இதே ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதமானது வளர்ச்சியினை மேம்படுத்தவும், பணப்புழக்கத்தினை மேம்படுத்தவும் இன்னும் சிறிது காலத்திற்கு இப்படியே தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. மொத்தத்தில் இது அனைத்து கடன்களுக்கு வட்டி குறைவாகவே வைத்திருக்க உதவும்.
இதற்கிடையில் தற்போது கோடக் மகேந்திரா வங்கி வீட்டுக் கடனிற்கு வட்டி விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து, வருடத்திற்கு வட்டி விகிதம் 6.65% ஆக குறைத்துள்ளது. இதில் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 0.50% ஆக உள்ளது.

Array

Array

பஞ்சாப் & சிந்த் வங்கியில் வட்டி விகிதம் 6.65%,ல் இருந்து ஆரம்பிக்கிறது. இங்கு 40 வருடம் வரையில் நீங்கள் கடனை செலுத்திக் கொள்ளலாம். இதே செயல்பாட்டுக் கட்டணம் ஜூன் 30, 2021 வரையில் ஜீரோவாக உள்ளது.

இதே எஸ்பிஐ-யில் 6.70%ல் வீட்டுக்கடன் கிடைக்கிறது. இதில் பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையுண்டு. இங்கு செயல்பாட்டு கட்டணமும் உண்டு.

 

Array

Array

முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி வீட்டுக் கடனுக்கு வடி விகிதம் 6.75% ஆக வசூல் செய்கிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணம் வாடிக்கையாளார்களுக்கு தகுந்தவாறு மாறுபடும்.

இதே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வட்டி விகிதம் 6.75% ஆகும். இங்கும் செயல்பாட்டுக் கட்டணம் என்பது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற்போல இருக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+