4 லட்சம் ரூபாயை 40 லட்சமாக மாற்றும் யுக்தி..!! முதலீட்டில் இப்படி ஒரு டெக்னிக் இருக்கா..?!

நாம் அனைவரும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் அதனை சரியான முறையில் முதலீடு செய்தால் மட்டுமே அந்த பணம் நமக்கு இன்னும் பணத்தை ஈட்டி தரும். இதற்காகத்தான் சம்பாதிக்க தொடங்கும் போது ஒரு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்து முதலீடு செய்ய வேண்டுமென முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதலீட்டு திட்டங்கள்: முதலீடு என வரும்போது வங்கிகளில் எஃப்டி மற்றும் ஆர்டி முதலீடுகள் இருக்கின்றன. இது தவிர அஞ்சல் அலுவலக முதலீட்டு திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் , பத்திரங்களில் முதலீடு செய்வது, பங்குச்சந்தைகளில் பங்குகளில் முதலீடு செய்வது என பல்வேறு முதலீடு வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. இந்த முதலீடு திட்டங்களில் மக்களிடையே பிரபலமாக இருப்பது lumpsum எனப்படும் ஒரு முறை முதலீடு மற்றும் எஸ்ஐபி எனப்படும் முதலீடுகள்.

4 லட்சம் ரூபாயை 40 லட்சமாக மாற்றும் யுக்தி..!! முதலீட்டில் இப்படி ஒரு டெக்னிக் இருக்கா..?!

Lumpsum vs SIP: தற்போது லம்ப்சம்(Lumpsum) முதலீடுகள் லாபம் தருமா அல்லது எஸ் ஐபி முதலீடுகள் லாபம் தருமா என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். இந்த உதாரணத்திற்காக நாம் 4 லட்சம் ரூபாயை எடுத்துக் கொள்ளப் போகிறோம். 4 லட்சம் ரூபாய் பணத்தை ஒரே முறையாக முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் நமக்கு எவ்வளவு பணம் கிடைக்கும், அதை மாதம் தோறும் பிரித்து எஸ்ஐபியாக முதலீடு செய்யும்போது அடுத்த 20 ஆண்டுகளில் எவ்வளவு பணம் நமக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Lumpsum முதலீடு: 4 லட்சம் ரூபாய் பணத்தை ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் ஒரே முறையாக லம்ப்சம் முறையில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொள்ளலாம். 20 ஆண்டுகள் கழித்து இந்த பணம் 38, 58, 517 ரூபாயாக உயர்வு கண்டிருக்கும். நீங்கள் செய்த 4 லட்சம் ரூபாய் முதலீடு 20 ஆண்டுகளில் உங்களுக்கு 34 , 58,517 ரூபாயை கூடுதல் வருமானமாக ஈட்டி தந்து இருக்கும். 21 ஆண்டுகள் கழித்து எடுத்தால் 4 லட்சம் ரூபாய் முதலீடு 40 லட்சமாக உயர்ந்திருக்கும்.

எஸ்ஐபி: இதே 4 லட்சம் ரூபாயை 20 ஆண்டுகளுக்கு பிரித்து எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம்.4 லட்சம் ரூபாயை மாதந்தோறும் எஸ்ஐபி முறையில் பிரித்தால் 20 ஆண்டுகளுக்கு நாம் மாதந்தோறும் 1667 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். 12 சதவீத ஆண்டு லாபம் தரக்கூடிய ஒரு நிதியில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால் 20 ஆண்டுகள் கழித்து நாம் செய்த மொத்த முதலீடு 4 லட்சம் ரூபாயாகவும் நமக்கு கிடைக்கக்கூடிய மொத்த பணம் 15,33,402 ரூபாயாகவும் இருக்கும்.

ஏன் லம்ப்சம் முறையில் அதிக லாபம்?: லம்ப்சம் முறையில் கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து விடுகிறோம். அது காம்பவுண்டிங் முறையில் வளர்வதற்கு இருபது ஆண்டு காலத்தை தருகிறோம். இதனால் அந்த பணம் அதிகளவு வளர்ச்சி பெறுகிறது. அந்த 4 லட்சம் ரூபாயை எஸ்ஐபி முறையில் 20 ஆண்டுகளுக்கு பிரித்து முதலீடு செய்யும் போது அது 4 லட்சம் ரூபாய் என ஆவதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிடுகிறது .

காம்பவுண்டிங்: எனவே காம்பவுண்டிங் முறையில் பார்க்கும்போதும் லம்ப்சம் முறை முதலீடு நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஒரு நபர் தன்னிடம் இருக்கும் பணத்தை எஸ்ஐபி முதலீடு செய்வதா அல்லது ஒரே முறை முதலீடாக செய்வதா என்பதை அவருடைய தற்போதைய நிதி நிலைமையும் எதிர்காலத்தில் அவருடைய நிதி சார்ந்த இலக்குகளும் தான் முடிவு செய்யும்.

ஸ்டெப் அப் எஸ்ஐபி: கையில் இருக்கும் மொத்த பணத்தையும் ஒரு முதலீட்டில் போட்டு விடுவது என்பது திடீரென அவசர காலத்திற்கு பணம் தேவைப்படும் போது உடனடியாக எடுக்க முடியாத சூழலை உண்டாக்கும் . அதே வேளையில் எஸ் ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் ஆண்டுதோறும் அதனை 5 முதல் 10% வரை ஸ்டெப் அப் செய்யலாம். ஆண்டுதோறும் எஸ்ஐபி ஸ்டெப் அப் முறையில் உயர்த்தி கொண்டே வரும்போது அது நமக்கு கணிசமான லாபத்தை தரக்கூடியதாக அமையும். இதே உதாரணத்தில் மாதம் 1667 ரூபாயை எஸ்ஐபி செய்கிறோம் அதனை ஆண்டுக்கு 10% என ஸ்டெப் அப் செய்தால் 20 ஆண்டுகளில் நம் கையில் 31 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+