இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு ஆலோசகர்கள் மத்தியில் முதலீடு என்றாலே, கட்டாயம் போர்ட்போலியோவில் மியூச்சுவல் பண்டுகள் இல்லாமல் இருக்காது. ஏனெனில் இது நீண்டகால நோக்கில் மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க பயன்படும் எனலாம்.
எனினும் இன்றும் பலரின் மத்தியிலும் இருக்கும் ஒரு சந்தேகம் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி-யில் முதலீடு செய்தால் அது லாபகரமானதா? அல்லது லம்ப் சம் ஆக முதலீடு செய்யலாமா? எது மிகப்பெரிய அளவில் லாபம் பார்க்க பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டுமே மியூச்சுவல் ஃபண்ட்
பொதுவாக ஒரு முதலீட்டாளராக பார்க்கும்போது லம்ப் சம் அல்லது எஸ் ஐ பி ஆக இருந்தாலும், இரண்டுமே மியூச்சுவல் ஃபண்டில் தான் முதலீடு செய்யப்படுகின்றது. அப்படி எனில் இரண்டுமே பெஸ்ட் தானே என்று கேட்பது புரிகிறது.
உதாரணத்திற்கு ஒரு கேக்கினை சாப்பிடும்போது அதனை முழுமையாக ஒரே நேரத்தில் சாப்பிடுவது லம்ப் சம் எனலாம். அதனை சிறிது சிறிதாக மெல்ல மெல்ல ரசித்து ருசித்து சாப்பிடுவது எஸ்ஐபி ஆகும். இரண்டுமே விருப்பமான ஸ்வீட் என்றாலும், அதனை மொத்தமாக சாப்பிடும்போது, அதனை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.
எஸ்ஐபி & லம்ப் சம்
எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வது பற்றி ஏற்கனவே பலரும் தெரிந்திருக்கலாம். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் பிளான் மூலம் முதலீடு செய்பவர்கள், தங்கள் கைகளில் இருக்கும் தொகையை மாத மாதம் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறது. லம்ப்சம் என்பது மொத்தமாக ஒரே முறை முதலீடு செய்வது. இந்த இரண்டிலுமே சாதக பாதங்கள் உண்டு.
எஸ்ஐபி
எஸ்ஐபி-யினை பொறுத்தவரையில் மாத சம்பளதாரர்கள், மொத்தமாக முதலீடு செய்ய முடியாது என நினைப்பவர்களுக்கு சிறந்த ஆப்சன் எனலாம். இது நீண்டகால நோக்கில் மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க பயன்படும். குறிப்பாக மாத மாதம் சிறிய தொகை செய்தாலே, எதிர்காலத்தில் பெரிய அளவிலான கார்பஸினை பெற முடியும்.
எஸ்ஐபி தான் பெஸ்ட்
எஸ்பிஐ-யினை பொறுத்தவரையில், மாத மாதம் முதலீடு செய்யும்போது என்ஏவி-யின் மதிப்பு குறைந்திருந்திருந்தாலும், பின்னர் மாத மாதம் முதலீடு செய்யும்போது சராசரியாக லாபம் அதிகரிக்கும். இது தான் எஸ்ஐபி-யின் சிறப்பு என்றும் கூட கூறலாம். இங்கு அதிகளவிலான NAV-யின் மதிப்பிலும் முதலீடு செய்திருப்போம். குறைந்த NAV-யின் மதிப்பிலும் முதலீடு செய்திருப்போம். எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அது லாபகரமான ஒன்றாக இருக்கும்.
லம்ப் சம்
லம்ப் சம் முதலீட்டினை பொறுத்தவரையில் நீங்கள் முதலீடு செய்யும்போது இருக்கும் NAV-யின் மதிப்பில் மட்டுமே இருக்கும். நீங்கள் முதலீடு செய்வதில் இருந்து உங்கள் NAV- மதிப்பு அதிகரித்தால் அது லாபகரமானதாக இருக்கும். இல்லையெனில் உங்களது முதலீடு சரிவினைக் கண்டு இருக்கும். இதனால் லாபமோ நஷ்டமோ பெரியளவில் இருக்கும். இதில் சற்று ரிஸ்க் அதிகம் என்றாலும் , லாபமும் அதிகம். எனினும் இதில் லம்ப்சம் ஆக மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
லம்ப் சம் மேஜிக்
உதாரணத்திற்கு 1000 ரூபாய் மதிப்பில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறீர்கள். உங்களிடம் 100 யூனிட்கள் இருக்கும். இந்த என்ஏவி மதிப்பு 1050 ரூபாயினை எட்டினால் , உங்கள் முதலீடு 1,05,000 ரூபாயாக இருக்கும். இதே உங்கள் என்ஏவி மதிப்பு 950 ரூபாயாக சரிவினைக் கண்டால், உங்கள் முதலீட்டின் மதிப்பு 95,000 ரூபாயாக இருக்கும். எனினும் இங்கு சந்தை சரிவினைக் காணும்போது உங்களால் முதலீடு செய்ய முடியும் எனில், குறைந்த என்ஏவி மதிப்பில் முதலீடு செய்தால் விரைவில் நஷ்டத்தினை மீட்டு லாபத்திற்கு திரும்பலாம்.
எஸ்ஐபி மேஜிக்
இதே எஸ்ஐபி எனில் நீங்கள் மாத மாதம் முதலீடு செய்யும்போது, மாதம் 5000 ரூபாய்க்கு 1000 ரூபாயில் 5 யூனிட், 950ல் கொஞ்சம் யூனிட், என சந்தை குறைந்திருந்தாலும் யூனிட் வாங்கியிருப்பீர்கள், அதிகரித்திருந்தாலும் யூனிட் வாங்கியிருப்பீர்கள். இது தான் எஸ்ஐபி வெற்றியின் தாரக மந்திரம். எனினும் சந்தை ஒரே பக்கமாக ஏற்றத்தினை கண்டால், அதில் லம்ப்சம் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபத்தில் இருக்கலாம். எனினும் இதுபோன்று அனைத்து திட்டங்களிலும் நடக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி தான்.
எது பெஸ்ட்
நடப்பு ஆண்டில் நிலவி வரும் சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சந்தையனது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதனால் லம்ப் சம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு பெரியளவில் வளர்ந்திருக்காது. இதே எஸ்பிஐயில் முதலீடு செய்தவர்கள், சந்தை சரியும்போதும் தொடர்ந்து முதலீடு செய்திருப்போம். இதனால் சந்தை ஏற்றம் காணும்போது லாபம் அதிகளவில் இருக்கும். ஆக எஸ்ஐபி என்பது மிக சிறந்த ஆப்சனாக இருக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications