குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு ஏற்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. பெண்களுக்காகத் தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் போஸ்ட் ஆபிஸ் தருகிறது.
இதில் மகிளா சம்மான் சேமிப்பு சான்று திட்டம் குறிப்பிடத்தக்கது. இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குறுகிய காலத்தில் அதிக வட்டி அளிக்கப்படுகிறது.

மகிளா சம்மான் சேமிப்பு சான்று திட்டம் பெண்களுக்காக சிறப்பாக தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் பெண்கள் முதலீடு செய்யும் தொகைக்கு குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் அதிகபட்சம் ரூ.2 லட்சத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை நரேந்திர மோடி அரசு 2023இல் தொடங்கியது. குறுகிய காலத்திலேயே இந்த திட்டம் மிகவும் பிரபலமாகி விட்டது. பெண்கள் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு இந்த திட்டங்களை அரசு நடத்தி வருகிறது.
இந்த திட்டத்துக்கு 7.5 சதவீதம் வட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் வருமான வரி பிரிவு 80 சியின்படி வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது.
மற்றொரு அம்சம் என்றால் 10 வயது மற்றும் அதற்கும் குறைவான பெண் குழந்தைகள் பெயரிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி தரப்படும். முதல் ஆண்டுக்கு ரூ.15,000 ஆகும்.
2ஆவது ஆண்டில் இந்தத் தொகை வட்டி சேர்த்து ரூ.16,125 ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.31,125 கிடைக்கும்.
மக்கள் நலனுக்காக போஸ்ட் ஆபிஸ் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் அனைத்துக்கும் மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளது. மொத்தமாக செலுத்தப்படும் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது. இது பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தரும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்று திட்டம் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்துக்காக போஸ்ட் ஆபிஸ்கள் மூலம் மத்திய அரசு நடத்தி வருகிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications