5 அரசு வங்கிகளின் மெகா அறிவிப்பு.. உங்க பணம் உங்க கையில்.. இனி மக்கள் நம்மதி..!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகள் முக்கியமான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு சாமானிய மக்களுக்கு பெரும் நம்மதியை கொடுத்துள்ளது. பொதுவாக வங்கிகள் ஜன்தன் யோஜனா கணக்குகளை தாண்டி அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறிப்பிட்ட அளவிலான தொகையை தொடர்ந்து சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த அளவை விட குறைவான தொகை இருந்தால் அதற்கு அபராதம் வசூலிக்கப்படும்.

இது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது மட்டும் அல்லாமல், வைப்பு தொகை குறைவாக இருக்கும் வங்கி கணக்கில் வரும் அரசின் மானிய தொகையும் இந்த அபராதம் தொகை காரணமாக வங்கி நிர்வாகம் பிடிக்கப்படும் காரணத்தால் மக்கள் கையில் இது சேர்வது இல்லை.

5 அரசு வங்கிகளின் மெகா அறிவிப்பு.. உங்க பணம் உங்க கையில்.. இனி மக்கள் நம்மதி..!

இந்த நிலையில் இந்தியாவின் டாப் 5 பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு (AMB - Average Monthly Balance) பராமரிக்க வேண்டிய கட்டாயத்தை நீக்கி, இதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களையும் முற்றிலும் அகற்றியுள்ளன. இந்த மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும் ஒரு முக்கியமான முடிவாகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, கனரா வங்கி ஆகியவை இந்த முடிவை அறிவித்துள்ளன, மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 2020 முதல் இதை அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் இருக்கும் மக்கள் அதிகளவில் பலன் பெற உள்ளனர். காரணம் பொதுத்துறை வங்கிகளில் அதிகம் கணக்கு வைத்துள்ளவர்கள் இப்பிரிவினர் தான்.

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு என்பது, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை ஆகும். இந்தத் தொகையை பராமரிக்கத் தவறினால், வங்கிகள் அபராதம் விதித்து வந்தன, இது கணக்கின் வகையைப் பொறுத்து மாறுபட்டது.

இந்த அபராதங்கள், குறிப்பாக சிறிய அளவிலான தொகையை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. ஆனால், இப்போது பல முன்னணி வங்கிகள் இந்தக் கட்டணங்களை முற்றிலும் நீக்கியுள்ளன, இது வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சுமையைக் குறைத்து, மக்கள் தங்கள் கணக்கில் இருக்கும் பணக்தை முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்துள்ளது. விலைவாசி உயர்ந்து வரும் வேளையில் இத்தகைய முடிவு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, ஜூலை 1, 2025 முதல், அனைத்து நிலையான சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காததற்கு விதிக்கப்படும் கட்டணங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகைய வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பேங்க் ஆஃப் பரோடா-வில் இந்தத் தள்ளுபடி, பிரீமியம் சேமிப்பு கணக்கு திட்டங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், இந்தியன் வங்கி, ஜூலை 7, 2025 முதல், அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தேவையை முற்றிலும் நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, சாதாரண சேமிப்பு கணக்குகள் முதல் அனைத்து வகையான கணக்குகளுக்கும் பொருந்தும்.

இதற்கு முன்பு, மே 2025 இல், கனரா வங்கி அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளுக்கும், அதாவது சாதாரண சேமிப்பு கணக்குகள், ஊதிய கணக்குகள் மற்றும் என்ஆர்ஐ சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தேவையை நீக்கியது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் எஸ்பிஐ ஆகியவையும் இந்த மாற்றத்தில் முன்னோடியாக உள்ளன. PNB, அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தேவையை நீக்கி, அபராதங்களை முற்றிலும் அகற்றியுள்ளது. SBI, 2020 ஆம் ஆண்டு முதல் இந்தக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது.

இதனால் இவ்விரு வங்கி வாடிக்கையாளர்களும் எந்தவித குறைந்தபட்ச இருப்பு தேவையையும் பராமரிக்க வேண்டியதில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+