சென்னை: தற்போதுள்ள விலைவாசி பற்றி சொல்லி மாளாது. மளிகை சாமான்கள் முதல் பெட்ரோல் டீசல் விலை வரை அனைத்தும் ஏற்றத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஒருவர் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு பல குடும்பங்கள் தள்ளப்படுகிறது. எனவே, இந்த பதிவில் ஒருவர் சம்பளத்தை வைத்து எவ்வாறு திறம்பட நிதியை நிர்வகிக்க முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் ஒருவர் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தும் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அதிலும் சில குடும்பங்களில் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வது, அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவது மற்றும் மளிகை சாமான்கள் வாங்குவது என நிறைய செலவுகள் இருக்கும். மேலும் பல குடும்பங்கள், இது போன்ற ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை நம்பியே உள்ளனர்.

இந்தக் குடும்பங்களுக்கு நிதி நிர்வகிப்பு மிகவும் முக்கியமானது. துல்லியமான திட்டமிடல் மற்றும் சில முக்கியமான யுக்திகளைப் பயன்படுத்தினால் மட்டுமே நன்றாகக் குடும்பம் நடத்த முடியும்.
எனவே ஒற்றை சம்பளம் பெறும் குடும்பத்திற்கு உதவும் வகையில், சில டிப்ஸ்களைப் பார்ப்போம். அதை பயன்படுத்தி ஒருவர் சம்பளம் பெறும் குடும்பத்தில் சிறப்பாக நிதியை நிர்வகிக்கலாம்.
பட்ஜெட் உருவாக்குவது மற்றும் செலவுகளைக் கண்காணிப்பது: உங்கள் செலவுகளை புரிந்து கொண்டு விரிவான பட்ஜெட்டை உருவாக்கவும். இதன் மூலம், நீங்கள் தேவையற்ற செலவுகள் செய்கிறீர்களா.. என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் நீங்கள் செய்யும் செலவுகள் குறித்தும் எழுதி வையுங்கள். வாடகை, மளிகை பொருட்கள், நீங்கள் விரும்பினால் சாப்பாட்டிற்கு செய்த செலவு, பொழுதுபோக்கு என பிரித்து எழுதி வையுங்கள். உங்கள் பட்ஜெட்டை நிர்வகிப்பதற்காகவே ஆப் ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன. ஆனால் இது போன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்து, தேவையற்ற எந்த அனுமதிகளையும் வழங்க வேண்டாம். இன்றெல்லாம் பல ஆப்கள் போட்டோ அனுமதி, காண்டாக்ட் அனுமதி போன்றவற்றைக் கேட்கின்றன. யூசர் எழுதிய ரிவியூக்களைப் படித்து தெரிந்த கொண்ட பின் மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்.
கடன்களைத் திருப்பிச் செலுத்துதல்: ஒருவரின் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதே அரிதாக இருக்கும் நேரத்தில், உங்களுக்கு ஏதேனும் அதிக வட்டி உள்ள கடன்கள் இருந்தால், அவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி யோசியுங்கள்.
கல்வி கடன், அடமானங்கள், வீட்டுக் கடன் போன்ற எந்த கடன்களாக இருந்தாலும், உங்களுடைய வருமானத்தில் சிறு தொகையை சேமித்து உங்கள் கடனின் அசல் தொகையுடன் வரவு வைத்துக் கொண்டே இருங்கள். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குள் அடைக்க வேண்டியக் கடனை 7 முதல் 8 ஆண்டுகளுக்குள் அடைக்கலாம். அதேபோல் நீங்கள் பணிபுரியும் ஊழியராக இருந்தால் கேப்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் OTT சந்தாக்களை முடிந்த அளவு குறைக்க முயற்சி செய்யுங்கள்.
சேமிப்பு திட்டத்தை உருவாக்கவும்: இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்களின் வருமானத்தில் சிறு தொகையை சேமிப்புக்காக பயன்படுத்துங்கள். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது உங்களுக்கு மகள்கள் இருந்தால் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது போன்ற திட்டங்கள் வரி சலுகைகள் மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. இந்த சேமிப்பு உங்களுக்கு தேவைப்படும் அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.
கூடுதல் வருமானம் பெறுவதைப் பற்றி ஆராயுங்கள்: உங்களுக்கு நேரம் இருந்தால் ஃப்ரீலான்ஸ் வேலை, ஆன்லைன் பயிற்சிகள், சமையல், தையல் போன்ற திறன் சார்ந்த வீட்டு வணிகங்களை பற்றி ஆராயுங்கள்.
நாம் வாழும் டிஜிட்டல் உலகில், இது போன்ற வேலைகளை செய்வது சுலபமே. ஆனால் உங்களுக்கு அதற்கான நேரம் இருக்க வேண்டும். தற்போது, அனைவரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் நீங்கள் இன்ஸ்டாகிராமிலேயே உங்களுடைய பொருட்களை எளிதில் விற்பனை செய்யலாம்.
கடைசியாக மிகவும் முக்கியமான செயல்முறைகளில் ஒன்று, உங்கள் குடும்பத்துடன் நேர்மையான உரையாடல் செய்வதாகும். உங்களின் வருமானத்தைப் பற்றியும் அதன் வரம்புகள் குறித்தும், அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அப்பொழுது தான் எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு தெரியவரும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications