2023-24ஆம் நிதியாண்டு வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் , வரி சேமிப்புக்கான வழிமுறைகள் என்ன, ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்ப பெறுவது எப்படி என்பது குறித்தும், அதற்கான வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
மருத்துவ காப்பீடு: மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் எளிதாக வருமான வரி விலக்கு பெற முடியும். மருத்துவ காப்பீட்டுக்கு நீங்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையை சுட்டிக்காட்டி வரி விலக்கு பெற முடியும் . 80டி பிரிவில் இதற்கு வழி உண்டு.

இது தவிர ஆயுள் காப்பீட்டிற்கும் பிரிவு 80சி- இன் கீழ் உங்களால் வரிச் சலுகை பெற முடியும். வயதான பெற்றோர் இருக்கிறார்கள் ,அவர்களின் மருத்துவ காப்பிட்டுக் கொள்கையை நீங்கள் தான் பார்த்துக் கொள்கிறீர்கள் என்றால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80டியின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வரிச்சலுகையையும் பெற முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்பு நிதி மற்றொரு சிறந்த முதலீட்டு விருப்பம் ஆகும். நீண்ட கால இலக்குகளுக்காக இதில் முதலீடு செய்யலாம். குறிப்பாக ஓய்வூதியத்தை கருத்தில் கொண்டும் முதலீடு செய்ய வேண்டும் . இதில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்: என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் அரசே வழங்கக்கூடிய ஒரு திட்டமாகும். இதில் முதலீடு செய்து முறையான சேமிப்பை மேற்கொண்டு நீண்ட கால நன்மைகளை பெற முடியும் . வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சிசிபி இன் கீழ் ஒருவர் கூடுதலாக 50,000 ரூபாய் வரை வரிச்சலுகைகளை கோர முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டமாகும். பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். சுகன்யா யோஜனாவுக்குச் செய்யப்படும் பங்களிப்புகள் வரி விலக்குகளுக்குத் தகுதி பெறுகின்றன. 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். கூடுதலாக, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு.
நிலையானவைப்புத் தொகை: நிலையான வைப்புத் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு சீரான வட்டி கிடைக்கும் வகையில் செய்யப்படும் டெபாசிட்டுகள் ஆகும். சிறிய தொகையில் இருந்து கூட முதலீடு செய்ய தொடங்கலாம் . முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி, முதிர்வு தொகை ஆகியவற்றுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி இன் கீழ் பலன்களை பெற முடியும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்: தேசிய சேமிப்பு சான்றிதழ் , பாதுகாப்பான மற்றும் வரி சேமிப்புக்கு உதவும் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். ஐந்து ஆண்டு கால முதிர்வு என்ற வகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-இன் கீழ் வரிகளை சேமிக்கலாம் . தேசிய சேமிப்பு சான்றிதழில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
Story Written by: Devika
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications