தபால் நிலையங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இங்கு பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு உதவும் வகையில் வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் இருந்தாலும் இங்கு வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் அதிக அளவில் மக்களை ஈர்க்கின்றன. வெவ்வேறு காலகட்டங்களில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் டெபாசிட் செய்யப்பட்ட அசல் தொகையை மூன்று மடங்காக அதிகரிக்கலாம்.
அதற்கு போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்டில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தற்போது போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்டில் ரூ.10 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 7.5 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளில் 4,49,948 ரூபாய் வட்டி கிடைக்கும். அப்படியானால் மொத்த முதிர்வுத் தொகையாக 14,49,948 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் முதலீட்டை மூன்று மடங்காக மாற்ற வேண்டுமானால் போஸ்ட் ஆபீஸ் FD முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அப்போது வட்டியாக 11,02,349 ரூபாய் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த முதிர்வு தொகை 21,02,349 ரூபாயாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகளுக்கு முதலீட்டை நீட்டிக்கும் பட்சத்தில் அதாவது 15-வது ஆண்டில் 10 லட்சம் முதலீட்டுக்கு வட்டியாக மட்டும் 20,48,297 ரூபாய் கிடைக்கும். முதிர்வு காலம் வரும்போது 30,48,297 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்த தொகை அசலை விட 3 மடங்காக மாறி இருக்கும்.
மேற்கண்ட உதாரணத்திற்கு நாங்கள் 5 வருட பிக்சட் டெபாசிட்டை எடுத்துக் கொண்டோம். 15 வருடங்களுக்கு முதலீடு செய்தால் தான் 3 மடங்கு ஆக மாறும். 15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதிர்வுக் காலம் கொண்ட சில திட்டங்களும் உள்ளன. உதாரணமாக PPF திட்டங்கள், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டங்கள் போன்றவை 15 மற்றும் 21 ஆண்டுகள் முதிர்வுக் காலத்தை கொண்டுள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீட்டை விரும்புபவர் என்றால் இந்த வகையில் உங்கள் பணத்தை 3 மடங்காக மாற்ற முடியும்.
10 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள், உங்களால் இயன்ற அளவு தொகையை முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். உதாரணமாக ஒருவர் 1 லட்ச ரூபாயை போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்டில் 5 ஆண்டுக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வட்டியாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதனால் முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.
இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் வட்டி வருமானமாக 1,10,235 கிடைக்கும். இதனால் முதிர்வுத் தொகை 2,10,235 ரூபாயாக மாறி இருக்கும். அதன் பிறகு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் உங்களுடைய 1 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு 2,04,830 வட்டி கிடைக்கும். அதற்கு முதிர்வுத் தொகையாக 3,04,830 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
இதிலிருந்து உங்களுடைய பணம் எப்படி 3 மடங்காக மாறுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். உங்களுடைய தனிப்பட்ட முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை நீங்கள் ஆன்லைன் பிக்சட் டெபாசிட் கால்குலேட்டர்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்.. நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்வது உங்கள் லாபத்தை அதிகரிக்கும் என்பதுதான்.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications