சென்னை: இந்தியாவில், பங்குச்சந்தை தொடர்பான ஒரு தவறான கருத்து மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை நிபுணரும், முன்னாள் ஐஐடி பேராசிரியருமான பட்டாபிராமன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய குடும்பங்களில் சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான ஒரு தவறான கருத்து வேரூன்றி வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் பைனான்சியலி ஃப்ரீ என்ற பாட்கேஸ்ட் ஒன்றில் பேசிய பட்டாபிராமன், பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் அதிக லாபம் தரும் என்ற தவறான கருத்து மக்கள் மனதில் விதைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் மட்டுமே இருக்கும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது.

பங்குச்சந்தை வீழ்ச்சி பற்றியோ அல்லது மெதுவான வளர்ச்சியை பற்றியோ யாரும் நினைத்துப் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வுகளுக்கு பெயர் போனவர் தான் பட்டாபிராமன். இவர், அதிகபட்சமான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் சிறந்த லாபம் பெறலாம் என நம்புவது ஏமாற்றத்தையே வழங்கும் என எச்சரித்துள்ளார்.
ஒரு சராசரி முதலீட்டாளர் தன்னுடைய மொத்த சேமிப்பில் 50 முதல் 60 சதவீத முதலீடு மட்டுமே ஈக்விட்டி சந்தையில் இருந்தால் போதும் என கூறியுள்ள அவர் நிலையான வருமான கருவிகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது உதவும் வகையில் மற்ற முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அனைவருமே தங்களுடைய முதலீடுகளை பன்முகப்படுத்திக் கொண்டால் ஒரு முதலீடு சரிவடையும்போது ஏற்படும் சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய பங்குச்சந்தை வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது இந்த சூழலில் அனைவரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் காண்கின்றனர், ஆனால் பங்குச்சந்தை சரிவினை அடையும்போது அது கடுமையான மன உளைச்சலையும் எதிர்மறையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதற்கும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னதாக மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், அண்மையில் வெளியிட்ட ஒரு ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கின்றனர் எனக் கூறுகிறது.
அதாவது 2023 ஆம் ஆண்டு household financial assets மதிப்பு 11.1 சதவீதமாக இருந்து தற்போது 28 சதவீதம் என அதிகரித்துள்ளது. அதாவது இவர்கள் அனைவரும் பெரும்பாலான முதலீடுகளை பங்குச் சந்தைகளிலேயே முதலீடு செய்துள்ளனர்.
தற்போது பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் இருக்கிறது இதில் முதலீடு செய்பவர்கள் சிறந்த செல்வ வளத்தை உருவாக்குகிறார்கள் என்பது பாசிட்டிவாக இருந்தாலும் இந்த அபரிவிதமான வளர்ச்சி என்பது நீடிக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications