சென்னை: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு பிரபலமான முறை SIP முதலீடுகள். இதன் மூலம் மாதாந்திர தவணையாக காலாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலையான தொகையை முதலீடு செய்ய முடியும். SIPகள் முதலீட்டாளர்களின் பிரபலமான தேர்வாக இருக்கிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த பதிவில் SIP முதலீடு செய்பவர்கள், ஏதேனும் ஒரு தவணையை செலுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும்.. என்பதை விரிவாகப் பார்ப்போம்.
சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தினால், நாம் செலுத்த வேண்டிய EMI தள்ளி போகலாம்.. நாம் கொடுக்க வேண்டிய கடன் தள்ளிப் போகலாம்.. நாம் செய்ய வேண்டிய செலவுகள் பணம் இல்லாத காரணத்தினால் தள்ளிப் போகலாம்.. இது போன்ற பல காரணங்களால் உங்களுடைய SIP முதலீட்டை தவறவிட்ட நிகழ்வுகள் நடந்திருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகளை தவறவிடுவது, அந்தத் தவறிய தவணையின் நேரத்தைப் பொறுத்து பல்வேறு தாக்கங்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

அபராதம்: அனைத்து நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு SIP தவணைத் தொகையை தவறவிட்டதற்காக அபராதம் விதிப்பதில்லை, இருந்தாலும் நீங்கள் ஒரு வங்கியின் SIP முதலீட்டு திட்டத்தை பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடலாம். இந்த அபராத தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
எனவே, நிலுவை தேதி நெருங்கும்போது உங்கள் வங்கி கணக்கில் SIP முதலீட்டில் பணம் செலுத்துவதற்கு போதுமான நிதி இருக்கிறதா.. என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். இல்லை எனில் வங்கிக்கு சரியான நேரத்தில் அறிவிப்பை வழங்குவதன் மூலம், நீங்கள் பணம் செலுத்துவதைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்தலாம்.
தவறவிட்ட தவணைகளின் எண்ணிக்கை: தவறவிட்ட SIP தவணைகளின் எண்ணிக்கை பொறுத்தே அதன் தாக்கம் இருக்கும். நீங்கள் ஒன்று அல்லது இரண்டு தவணைகளை தவறவிடுவது, உங்கள் நீண்டகால முதலீட்டு இலக்குகளை அடைவதை பாதிக்காது. இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து மூன்று தவணைகளைத் தவறவிட்டால் உங்களுடைய SIP ரத்து செய்யப்படலாம்.
தவறவிட்ட கூட்டு வருமானம்: SIPகளின் முக்கிய பலன்களில் ஒன்று கூட்டு வட்டியின் மூலம் உங்களுக்கு கிடைக்க இருக்கும் வருமானம். ஒரு SIP கட்டணத்தை தவறவிட்டாலும், அது உங்கள் முதலீட்டின் மீதான கூட்டு விளைவைக் குறைக்கும் வாய்ப்புள்ளது.
குறைந்த கார்பஸ்: நீங்கள் SIP முதலீட்டுத் தவணைகளைத் தவறவிடுவதால், முதிர்வு காலத்தின் போது குறைந்த கார்பஸ் மட்டுமே பெற முடியும். தொடர்ந்து சரிவர முதலீடு செய்யும்போது முடிவில் உங்களுக்கு நீங்கள் நினைத்த கார்பஸ் கிடைக்கும்.
சராசரி விளைவுகள்: நிலையற்ற சந்தைகளில் விலைகள் குறைவாக இருக்கும் போது அதிக யூனிட்களையும் விலை அதிகமாக இருக்கும் போது குறைவான யூனிட்களையும் SIP முதலீட்டு திட்டங்கள் வாங்க உதவுகின்றன. SIP தவணையை தவற விடும்போது, இந்த சராசரி விளைவை சீர்குலைத்து, அதிக சந்தை அபாயங்களுக்கு உங்கள் முதலீடு உட்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications