சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் பணத்திற்கு தொடர்ந்து வட்டி கிடைக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் விலைவாசியோடு ஒப்பிடும்போது நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான வங்கிகள் சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் பணத்திற்கு குறைந்த வட்டி மட்டுமே வழங்குகின்றன.இந்த வட்டி தற்போதைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் அவ்வளவு உதவிகரமானதாக இருக்காது என்பதே நிதர்சன உண்மை.
5.8% பணவீக்கம்: பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. தற்போதைய பணவீக்கம் விகிதம் 5.8 சதவீதமாக உள்ளது. மளிகை பொருட்கள், மின்சாரம், வீட்டு உபயோக செலவுகள் என அனைத்தும் சாமானியர்களை வாட்டி வதைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க இந்தியர்களிடம் சேமிப்பு குறைந்து வருவது தெரியவந்துள்ளது. 2025 நிதியாண்டில் ரூ.22.57 லட்சம் கோடியாக இருந்த இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு.. தற்போது ரூ.21.69 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 4 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாமல் மாக்கள் தங்கள் சேமிப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சிலர் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர்.
நெகட்டிவ் ரிட்டன்ஸ்: நீங்கள் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு வட்டி வருமானம் கிடைத்தாலும் பணவீக்கத்தின் சதவீதத்தை கழித்து பார்க்கும் போது அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். வங்கிகள் 2.7% முதல் 3% சேமிப்புக் கணக்கிற்கு வட்டி வழங்குகின்றன.
ஆனால் தற்போதைய பணவீக்க விகிதம் 5.8%. நீங்கள் 3 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டியை பெற்றாலும் 5.8% பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது -2.8 என்று கிடைக்கும். அதாவது வட்டி வந்தாலும் பணத்தின் வாங்கும் திறன் குறைந்து வருவதே இதன் பொருள்.
பணவீக்கம் என்றால் என்ன?: பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்று கூறுகிறோம். உதாரணமாக ஒரு வருடத்திற்கு முன்பு 100 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கிய பொருட்களில் பாதியை கூட தற்போது வாங்க முடியாது. உற்பத்தி செலவு அதிகரிப்பதால் பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்: அவசரத்திற்கு தேவைப்படும் பணத்தை மட்டும் சேவிங்ஸ் அக்கவுண்டில் வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை அதிக லாபம் தரும் இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
மேலும் மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவை உங்கள் முதலீட்டை பல நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களும் எஸ்ஐபி முறையை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.இது சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு வழங்கப்படும் வட்டியைக் காட்டிலும் மிக மிக அதிகம்.
முதலீட்டை பல்வகைப்படுத்துதல்: பங்குச்சந்தையை முழுமையாக நம்ப யோசிக்கும் நபர்கள் மற்ற பாதுகாப்பான வழிகளிலும் சேமிக்கலாம். தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு போன்றவையும் நல்ல லாபம் தரும். தங்கத்தின் கடந்த கால செயல்திறனை பார்த்தால் தங்கம் பிற முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அதிக லாபத்தை வழங்கியுள்ளது. எனவே முதலீட்டுக்காக வாங்குபவர்கள் கோல்ட் காயின்கள் மற்றும் கோல்ட் பார்களை வாங்கலாம்.
இதனால் பிற்காலத்தில் விற்பனை செய்தாலும் அதை மார்க்கெட் ரேட்டுக்கு எடுத்துக் கொள்வார்கள். அதேபோல லேண்ட் அல்லது வீடு வாங்குவதற்கும் உங்கள் பணத்தை பயன்படுத்தலாம். அவசரத்திற்கு தேவைப்படும் பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எளிதாக எடுக்கும்படி வைத்துக்கொண்டு மீதி பணத்தை எதிர்கால தேவைகளுக்கு.. பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் முதலீடு செய்வதே லாபகரமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications