நகைக் கடன் வழங்குவதில் புதிய மாற்றம்.. கதி கலங்கிய முத்தூட், ஐஐஎஃப்எல் பைனான்ஸ்..!

தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்தது. முறையற்ற தங்க மதிப்பீடு, கேள்விக்குரிய ஏல நடைமுறைகள், தங்க சேமிப்பு மற்றும் எடையிடல் போன்ற பணிகளை கையாள ஃபின்டெக் முகவர்களை பயன்படுத்துவது போன்றவற்றில் ரிசர்வ் வங்கி விதிகளை கடுமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, முக்கிய தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களான முத்தூட் பைனான்ஸ் மற்றும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் விலை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே முத்தூட் ஃபைனான்ஸ் பங்கின் விலை 11 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.2,027.25 வரை சென்றது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் முத்தூட் ஃபைனான்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.70 சதவீதம் சரிந்து ரூ.2,140.30ல் முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே ஐஐஎஃப்எல் பைனான்ஸ் பங்கு விலை 8 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டு ரூ.305.55ஆக குறைந்தது. இருப்பினும் இறுதியில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.56 சதவீதம் மட்டுமே சரிந்து ரூ.325.05ல் முடிவுற்றது.

விதிகளை கடுமையாக்கும் ஆர்பிஐ.. சிக்கலில் முத்தூட், ஐஐஎஃப்எல், மணப்புரம் ஃபைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.75 சதவீதம் குறைந்து ரூ.224.90ஆக சரிந்தது. வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 3 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து பிரபல நிதி நிறுவனர் ஒருவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தங்க அடமானத்தின் மீது கடன் வழங்குவதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. தங்க கடன் திட்டங்களை கண்காணித்ததில் பல முறைகேடுகளை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது மற்றும் விதிமுறைகளை பின்பற்றப்படாதது ஆகியவை கருத்தில் கொண்டு, கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மேற்பார்வை பரிந்துரைகள் மற்றும் எச்சரிக்கை ஆலோசனைகளையும் ரிசா்வ் வங்கி வழங்கியது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, தங்க கடன் திட்டங்கள் மீது கடுமையான மேற்பார்வை மேற்கொள்ளும் ரிசர்வ் வங்கியின் நோக்கத்தை விளக்குகிறது. முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களின் வடிவத்தை பொறுத்து, இந்த நடவடிக்கை இணக்க செலவுகளை அதிகரிக்கும் மற்றும் தங்கத்திற்கு ஈடாக கடன் வழங்கும் தொழிலில் முதன்மையாக ஈடுபட்டுள்ள கடன் நிறுவனங்களின் சுமையை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடர்பாக கூறுகையில், தங்க நகைகள் மூலம் ஆதரிக்கப்படும் கடன்களுக்கான விதிமுறைகள் ஒரே மாதிரி இருப்பதை நோக்கமாக கொண்ட விரிவான வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிடும். மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக இந்த வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். வரவிருக்கும் அனைத்து ஒழுங்கபடுத்தப்பட்ட நிறுவனங்களிலும் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒண்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் அவற்றின் இடர்தாங்கும் திறன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. தற்போது வங்கிகள் மற்றும் வங்கி சாரா கடன் வழங்குநர்களிடையே விதிகள் பரவலாக வேறுபடுகின்றன. சமீபத்திய ரிசர்வ் வங்கி தணிக்கைகளில் அடையாளம் காணப்பட்ட பல அபாயங்களை தொடர்நது, புதிய கட்டமைப்பானது விவேகமான மற்றும் நடத்தை தொடர்பான அம்சங்களை கையாளும் என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+