சென்னை: மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டங்கள் மூலம் நீண்டகால முதலீட்டிற்கு நல்ல லாபம் பெற முடியும் என்று பல முதலீட்டாளர்களும் நிரூபித்துள்ளனர். இது கூட்டு வட்டி முறையில் செயல்படுவதால் உங்களுடைய முதலீட்டிற்கு நல்ல வருமானத்தை பெற உதவுகிறது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்ட் SIPகளில் தவறாமல் மாதம்தோறும் முதலீடு செய்யும் போது, நீண்ட கால கார்பஸை உருவாக்க முடியும். இந்தப் பதிவில் ரூ. 1,000 ரூபாய் SIP முதலீட்டின் மூலம், ரூ. 1 கோடி கார்ப்பஸை உருவாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
முதலீடாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரை பயன்படுத்தி தகுந்த முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யலாம். இதன் மூலம் அவர்களுடைய நிதி முன்னேற்றத்தை அதிகரிக்க முடியும். நீங்கள் ரூ. 1,000 ரூபாய் SIP முதலீடு செய்யும் போது, கூட்டு வட்டி முறையில் குறிப்பிட்ட கால அளவிற்கு பிறகு, அதிக லாபம் பெற முடியும்.

கூட்டு வட்டி என்றால் என்ன?: கூட்டு வட்டி என்பது உங்கள் அசல் முதலீடு மற்றும் நீங்கள் ஏற்கனவே சம்பாதித்த வட்டி ஆகிய இரண்டிற்கும் வட்டி பெறுவீர்கள். ஒவ்வொரு ஆண்டும், உங்கள் அசல் முதலீட்டில் வட்டி சேர்க்கப்படும், எனவே அடுத்த ஆண்டு அந்த பெரிய தொகைக்கு வட்டி கிடைக்கும். இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் தொடர்கிறது, காலப்போக்கில் உங்கள் பணம் வேகமாக வளர உதவுகிறது.
ரூ. 1,000 ரூபாய் SIP முதலீடு செய்து, ரூ. 1.2 கோடி பெறுவது எப்படி?: உங்களுடைய 20வது வயதில் இருந்து SIP முதலீட்டில் ரூ.1,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு 30 வயது வரும்போது ரூ. 3,000 ரூபாயும், 40 வயதில் 4000 ரூபாயும் முதலீடு செய்ய தொடங்கினால், 60 வயதிற்குள் நீங்கள் கோடீஸ்வரராக ஆகலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டில் ரூ. 1,000 முதலீட்டில் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால், ரூ.1.19 கோடி கார்ப்பஸை பெறலாம். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர SIP-யை 10 சதவீதம் அதிகரித்தால், உங்கள் கார்பஸ் ரூ. 3.5 கோடியாக உயரக்கூடும். கூட்டு வட்டியின் மூலம் நீங்கள் அதிக லாபத்தை பெறலாம்.
நீங்கள் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து, ரூ. 3000 SIP முதலீடு செய்கிறீர்கள் என்றால், முதலீட்டு காலத்தின் போது ரூ. 1.5 கோடி கார்ப்பஸை உருவாக்க முடியும். அதேபோல ஆண்டுக்கு 10 சதவீதத்தை அதிகரித்தால் உங்களுடைய ஒட்டுமொத்த கார்பஸ் ரூ. 2.65 கோடியாக இருக்கும்.
சரி சற்று காலம் தள்ளி 40 வயதில் நீங்கள் SIP முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள் என்றால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு 12 சதவீத வருடாந்திர வருமானத்துடன் ரூ. 1,000 முதலீடு செய்தால் ரூ 40 லட்சம் கார்பஸை பெற முடியும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!



Click it and Unblock the Notifications