SIP என்பது "Systematic Investment Plan" என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் ஆகும். இது ஒரு முதலீட்டு முறையாகும், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதம் அல்லது வாரம் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நீங்கள் நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்க முடியும். இந்தப் பதிவில் மாதம் ரூ. 3000 SIP முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP என்பது நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்கி, அதிக தொகையை சேமிக்க உதவும் சிறந்த வழியாகும். இதில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் தேர்ந்தெடுத்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

SIP முதலீடுகள் கூட்டு வட்டி முறையை பயன்படுத்துகின்றன. அதாவது நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி வழங்கப்படும். அதன் பிறகு அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படும்.
ரூ.1000 SIP முதலீட்டை ரூ.1.2 கோடியாக மாற்றுவது எப்படி?: உதாரணமாக, ரூ.1000 மாத SIP முதலீட்டில் தொடர்ந்து 40 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தால், 12% வருடாந்திர வருமானம் என்ற விகிதத்தில், ரூ.1.19 கோடி பெறலாம். இந்த மாதாந்திர SIP தொகையை ஒவ்வொரு வருடமும் 10 % அதிகரித்தால், கூட்டு வட்டியின் மூலம் உங்கள் தொகை ரூ.3.5 கோடியாக மாறும்.
அதே போல ரூ. 3000 தொகையை மாத SIP முதலீட்டில் தொடர்ந்து 30 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தால், 12% வருடாந்திர வருமானம் என்ற விகிதத்தில், ரூ.1.05 கோடியை முதிர்வு காலத்தில் பெற முடியும்.
பின்பு SIP தொகையை ஒவ்வொரு வருடமும் 10 % அதிகரித்தால், உங்களுடைய வருமானம் ரூ. 2.65 கோடியாகும். அதேபோல உங்களுடைய 40-வது வயதில் SIP முதலீட்டை தொடங்கி மாதம் ரூ.3,000 ரூபாய் என்ற விகிதத்தில் 20 வருட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், 12 சதவீத வருடாந்திர வருமானத்தில் ரூ. 40 லட்சம் ரூபாயை உருவாக்க முடியும். ஒரு வேளை இதே தொகையை வருடா வருடம் 10 சதவீதம் அதிகரித்தால் சுமார் ரூ.80 லட்சம் வரை வருமானமாக பெற முடியும்.
எப்படி சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் கால்குலேட்டர்கள் இருக்கிறதோ? அதேபோல SIP மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கும் கால்குலேட்டர்கள் உள்ளன. அவற்றில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? அதற்கு வருடாந்திர வருமானம் எத்தனை சதவிகிதம்? என்ற விவரங்களை என்டர் செய்யும்போது, உங்களால் முதிர்வு காலத்தின் போது எவ்வளவு தொகையைப் பெற முடியும் என்ற விவரங்களைப் பார்க்க முடியும்.
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால் ஏற்கனவே ஒரு திட்டம் நன்றாக செயல்பட்டு இருக்கும். அதாவது அந்த பண்டின் பெர்ஃபார்மன்ஸ் சரிவர இருந்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை பெற்று தந்திருக்கும்.
அதையே நம்பி மீண்டும் முதலீடு செய்வதால் கண்டிப்பாக முந்தைய முதலீட்டாளர்களைப் போலவே, உங்களுக்கும் லாபம் கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எனவே உங்களுடைய முதலீட்டை தொடங்குவதற்கு முன்பு, ஒரு நிதி ஆலோசகரை அணுகி அவருடைய ஆலோசனையை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications