ஐடி, ஸ்டார்ட்அப், வங்கி, கார்ப்பரேட் பணியில் இருக்கும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் தாங்கள் ரிட்டையர் ஆகும் போது மாசம் 1 லட்சம் வருமானம் வேண்டும் என திட்டமிடும் காலம். இதற்காக பலர் கல்லூரி முடித்த உடனேயே ஜாலியாக சுற்றுவதை நிறுத்திவிட்டு கடிமையாக பணியாற்றி 30 முதல் 35 வயதில் உயர் பதவிகளிலோ அல்லது சொந்தமாக தொழில் துவங்குகிறார்கள்.
இப்படியிருக்கையில் மாதம் 1 லட்சம் வருமானம் என்பது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி நிதிசுதந்திரத்தை கொடுக்கும். இந்த நிலையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் SWP மூலம் ஒருவர் நிலையாகவோ அல்லது தங்களுக்கு தேவையான தொகையை குறித்த நாளில் பெற முடியும்.

அதாவது மாதம் துவங்கி 5 ஆம் தேதி ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் ரூபாய் வேண்டுமாயின் இந்த SWP திட்டத்தின் வாயிலாக பெற முடியும். இது காலாண்டு அடிப்படையாகவோ அல்லது அரையாண்டு, வருடாந்திர அடிப்படையில் கூட எடுத்துக்கொள்ள முடியும்.
மியூச்சுவல் பண்ட் SWP திட்டம் மூலம் ஒருவர் மாதம் மாதம் 1 லட்சம் ரூபாய் வேண்டுமாயின் முதலில் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டியது கட்டாயம். முதலீடு செய்யாமல் எந்த விதமான லாபத்தையும் அறுவடை செய்ய முடியாது.
உதாரணமாக 10 ரூபாய் NAV கொண்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் 1 லட்சம் யூனிட்களை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் முதலீட்டு தொகை 10 லட்சம் ரூபாய், நீங்கள் ஒரு மாதத்திர்கு 10000 ரூபாய் வித்டிரா செய்யும் வகையில் SWP திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு இருந்தால், மியூச்சவல் பண்ட் நிறுவனம் 1000 யூனிட்-ஐ ரிடீம் செய்து உங்களுக்கு டெபாசிட் செய்யும்.
இதுவே அடுத்த மாதம் நீங்கள் செய்த முதலீட்டின் NAV 12 ரூபாயாக உயரும் பட்சத்தில் 833 யூனிட்களை ரிடீம் செய்து 10000 ரூபாய் டெபாசிட் செய்யும். இதன் மூலம் உங்களிடம் இருக்கும் யூனிட்கள் ஒவ்வொரு மாதமும் குறையும். (நீங்கள் காலாண்டு அடிப்படையில் வித்டிரா செய்திருந்தால் காலாண்டு அடிப்படையில் ரிடீம் செய்யப்படும்).

இந்த நிலையில் நீங்கள் 25 வருடத்திற்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வீதம் பெற வேண்டும் என திட்டமிட்டு ரிட்டையர்மென்ட எடுத்தால் மியூச்சுவல் பண்ட் SWP திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..? மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் 12 சதவீதத்திற்கும் அதிகமாக லாபம் கிடைத்தாலும் நீண்ட கால அடிப்படையில் நாம் 8 சதவீத வருடாந்திர லாப அளவீட்டை கணக்கில் எடுத்துக்கொள்வோம்.
25 வருடத்திற்கு மாதம் 1 லட்சம் வீதம் 8 சதவீத வருடாந்திர லாப அடிப்படையில் உங்களுடைய மியூச்சுவல் பண்ட் SWP திட்டத்தை டிசைன் செய்தால், இதை அடைய முதலில் நீங்கள் 1.55 கோடி ரூபாய் முதலீடு செய்யவேண்டும். 25 வருட முடிவில் உங்கள் கணக்கில் 1.55 கோடி ரூபாயும் இருக்கும்.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications