மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது இந்தியாவில் அதிகமாகி வருகிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகை அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் பணம் பாதுகாப்புடன் இருப்பது மட்டுமின்றி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளை விட அதிகமாக வருவாய் கிடைக்கிறது என்பதும் இதில் அதிகமானோர் முதலீடு செய்ய காரணமாக உள்ளது.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? அல்லது சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் எடுக்க முடியுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
மியூச்சுவல் ஃபண்ட்
ஓப்பன் எண்டு ஃபண்ட் என்ற மியூச்சுவல் ஃபண்ட் என்பது அனைத்து வர்த்தக நாட்களிலும் திரும்ப பெறுவதை அனுமதிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் வர்த்தகம் இல்லாத நாளன்று மற்றும் மதியம் 3 மணிக்கு மேல் முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்க முடியாது. இருப்பினும் அந்த நேரத்தில் நான் பணத்தை எடுக்க விண்ணப்பம் செய்தால் அடுத்த வர்த்தக நாளின் போது நமது விண்ணப்பம் செயலாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ட்போலியோ எண்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் திரும்ப போர்ட்போலியோ எண்ணை குறிப்பிட்டு பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கையொப்பமிட்ட வடிவத்தை ஒப்படைத்தால் போதுமானது. அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் மூலம் தளங்களின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை திரும்பப் பெற முடியும்.
முதலீட்டாளரின் வங்கிக்கணக்கு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நாம் திரும்ப பெற வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான விண்ணப்பம் செய்து விட்டால் அடுத்த பத்து நாட்களில் முதலீட்டாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் ஸ்கீம்
ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் ஸ்கீம்களுடன் (ELSS) செய்யப்பட்ட முதலீடுகள் மட்டும் மூன்று வருட லாக்-இன் காலகட்டம் இருக்கும். இந்த கால கட்டத்திற்கு பின்பு எந்த ஒரு வர்த்தக நாளிலும் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications