இந்தியாவில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலீடுகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு எஸ்ஐபி முறையில் முதலீடு மேற்கொள்பவர்கள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட மாற்றங்கள் அடிப்படையில் தங்களுடைய முதலீடுகளை மாற்றி அமைக்கவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அதிகரித்த எஸ்ஐபி முதலீடு: அண்மையில் இந்திய மியூச்சுவல் ஃபண்டு கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளில் இது தெரிய வந்திருக்கிறது. இதன்படி 2025 மே மாதம் இந்தியாவில் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்த மொத்த தொகை 26 ,688 கோடி ரூபாயாகும் . இது முந்தைய மாதத்தை விட 0.21 சதவீதம் அதிகம் என மியூச்சுவல் ஃபண்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் ஈக்விட்டி பிரிவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது குறைந்த இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எஸ்ஐபி கணக்குகளும் உயர்வு: மேலும் இந்தியாவில் எஸ்ஐபி முறை முதலீட்டுக்காக தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 8. 38 கோடியில் இருந்து 8.56 கோடி என மே மாதம் உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகுதி 26,632 கோடி ரூபாயாகத்தான் இருந்தது, அது மே மாதத்தில் 26 ,688 கோடி ரூபாய் என அதிகரித்து இருக்கிறது. அதாவது எஸ்ஐபி முறையில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரிப்பதையே இது காட்டுவதாக இந்திய மியூச்சுவல் ஃபண்டு கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.
ஈக்விட்டியில் ஏன் குறைவு?: எதிர்வரும் காலங்களிலும் இந்த முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், முதலீட்டாளர்கள் பலரும் நீண்ட கால இலக்கை அடிப்படையாகக் கொண்டு எஸ்ஐபி முறையில் முதலீடுகளை செய்ய தொடங்கியிருக்கின்றனர் இது ஒரு நல்ல மாற்றம் என்றும் மார்னிங் ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஹிமான்சு ஸ்ரீவாஸ்தவா தெரிவித்திருக்கிறார்.ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடுகள் குறைந்து இருந்தாலும் அடுத்து வரும் மாதங்களில் அது அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
எஸ்ஐபிக்கு அதிகரிக்கும் ஆதரவு: இந்தியாவில் ஏப்ரல் மாதம் எஸ்ஐபி முறையில் செய்யப்பட்ட மொத்த முதலீடுகளின் மதிப்பு 13.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது அது மே மாதம் 14.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. மொத்தமாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் மேலாண்மை செய்யப்படும் பணத்தில் சுமார் 20 சதவீதம் எஸ்ஐபி முறையில் செய்யப்பட்ட முதலீடுகள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஈக்விட்டி திட்டங்கள்: மே மாத நிலவரப்படி இந்தியாவில் இருக்கும் மொத்த எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை 9.06 கோடி ஆகும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் மே மாதத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் இல்லாத அளவாக 21.6 சதவீதம் குறைந்திருக்கிறது. அதாவது மே மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் 19,000 கோடி ரூபாய் மட்டுமே என மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் இந்திய கூட்டமைப்பு கூறி இருக்கிறது.
எதில் அதிக முதலீடு?: சர்வதேச நிலவரங்கள் காரணமாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதே ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு குறைய காரணம் என சொல்லப்படுகிறது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு குறைந்திருந்தாலும், பங்குகள், கடன் பத்திரங்கள், கமாடிட்டீஸ், ஈக்விட்டி என பல துறைகளிலும் முதலீடு செய்யக்கூடிய ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு 45 சதவீதம் உயர்ந்து சுமார் 20,765 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது. அதாவது முதலீட்டை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் ஆர்வம் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் பிறந்துள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications