மியூச்சுவல் பண்ட் முதலீடுகளுக்கு நாமினி நியமிப்பதை கட்டாயமாக்கி உள்ளது செபி. வங்கிக் கணக்கு, இன்சூரன்ஸ், பிக்ஸட் டெபாசிட் மற்றும் மற்ற முதலீட்டு திட்டங்களுக்கு நியமிக்கும் நாமினியை போல மியூச்சுவல் பண்ட்-க்கும் நாமினி நியமிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தவர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தாலோ அல்லது மற்ற ஏதேனும் பிரச்சனைகளினால், செய்த முதலீடு என்பது முதலீட்டாளர்களுக்கு பலனளிக்க முடிவதில்லை.
நாமினி கட்டாயம்
இன்னும் சொல்லப்போனால் பலரும் தாங்கள் செய்த முதலீடுகளை தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமலேயே வைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பிறகு யாரும் பலனடைய முடியாமல், கடைசியில் வீணாகிறது.
முதலீட்டாளர்கள் மார்ச் 31,2023க்குள் மியூச்சுவல் பண்டுக்கான நாமினியை நியமிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உங்கள் கணக்கை இயக்க முடியாது என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்
இதன் மூலம் நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களது குடும்பத்தினர் பலனடைய முடியும். ஆக கட்டாயம் முதலீடு செய்வது என்பது அவசியம். இதற்காக நீங்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ள முடியும். நேரடி மியூச்சுவல் பண்ட் புரோமோட்டர்கள் மூலமாகவும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
அனைத்திலும் நாமினி பதிவு செய்யணும்
இதற்கான படிவத்தை நீங்கள் பெற்று அதில் நாமினியின் பெயர், அவர்களின் வயது, முகவரி உள்ளிட்டவைகளை கொடுக்க வேண்டியிருக்கும். ஆன்லைனிலும் ஓடிபியை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், அனைத்திலும் நாமினி அப்டேட் செய்யப்பட வேண்டும்.
விரைவில் அப்டேட் செய்யுங்கள்
ஒரு வேளை நீங்கள் மார்ச் 31-க்குள் உங்களது நாமினியை அப்டேட் செய்யவில்லை எனில், உங்களது முதலீடானது ப்ரீஸ் செய்யப்படும். இது உங்களது எதிர்கால நிதி திட்டமிடலில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக விரைவில் அப்டேட் செய்து கொள்வது நல்லது.
கட்டாயம் செய்திடுங்கள்
குறிப்பாக மார்ச் 31-க்குள் நீங்கள் அப்டேட் செய்யாவிட்டால் புதியதாக முதலீடு செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது. இதனால் செய்த முதலீட்டினையும் வெளியே எடுக்க முடியாது. ஆக நாமினி விபரத்தை பதிவு செய்யாதவர்களுகள் பங்கு சந்தை, மியூச்சுவல் பண்ட் டீமேட் கணக்குகளில் உடனடியாக நாமினி விவரத்தை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிடில் அது சிக்கல் தான்.
நம்பிக்கையானவர்கள் தான் நாமினி
குருவி சேர்ப்பது போல கஷ்டப்பட்டு செய்யப்படும் முதலீடுகள், யாருக்கும் பலனளிக்காமல் இருப்பதை காட்டிலும், நமக்கு அடுத்து நமது சந்ததிகள் ஆவது பலன் பெறலாம். ஆக உங்களுக்கு முதலீட்டுக்கு பாதுகாப்பாக உங்கள் நம்பிக்கையானவர்களை நாமினியாக நியமிக்கலாம்.


Click it and Unblock the Notifications